ஒரு தலை காதல்

என்
பார்வை
உன் பார்வையை
தரிசித்த போது
பூக்களின் மகரந்தச்சேர்கையாய்
காதலை உணர்ந்தேன்.

நீ
என்னுடன் பேசிய
முதல் பேச்சின் பின் தான்
கருவுற்ற தாய் போல்
என்னுள்
நம்
காதல் கரு வைத்தேன்.

நாம்
பேசிக்கழித்த கணத்தில் தான்
என்னுள்
நம்
காதல் கருவும் வளர்ந்தது.

இறுதியில்
நாம் பேசிப்பழகியது
நட்பென்றாய்.

பெண்ணின்
பொய் கற்பம் போல்
என்
காதலும் ஒருதலையா?
****************************************
Already Posted in காணியாறு on 17.06.2006.

2 மறுமொழிகள்

  1. kandeepan சொன்னது,

    செப்டம்பர் 10, 2006 இல் 9:43 பிற்பகல்

    இறுதியில்
    நாம் பேசிப்பழகியது
    நட்பென்றாய்.

    nice

    http://www.kandeepan30.blogspot.com

  2. சத்தியா சொன்னது,

    செப்டம்பர் 11, 2006 இல் 2:54 மு.பகல்

    ஓ!… ஒரு தலைக் காதலா?
    ம்… சோகம்தான்.

    கவிதை சொன்ன விதம் அருமை!


மறுமொழியொன்றை வழங்குக