யார் நெய்த வெள்ளைக் கம்பளம்
யாரை விரிந்து பறந்து வரவேற்கின்றது?…
மேகம்.
ஃ
வானவீதியில் சண்டைசெய்வது யார்?..
ஓயாத வெடியோசை கேட்கின்றதே…
இடிமுழக்கம்.
ஃ
யார் வீட்டு திருமணம்
பன்னீர் தூவி வரவேற்கின்றதே!…
மழை.
ஃ
பூமிதேவதை கொடுக்கும் பூச்செண்டு
வானதேவனின் மழைமுத்தத்திற்கு பரிசாய்!…
முளைவிடும் இளம் தளிர்கள்.
ஃ
விரித்து வைத்த பச்சைக் குடைகள்
பூமிப் பெண்ணின் நலன் காக்கவா?!…
மரங்கள்.
ஃஃஃ