திருமண நாள்…


நேற்றைய முன்தினம் தான்
நடந்தது போல் உணர்கின்றேன்…
சில நேரங்களில்
தூங்கி எழுந்ததற்கான நேரமே
கடந்தது போல் நினைக்கின்றேன்…
ஆனால்…
ஆண்டுகள் பதினொன்று கடக்கின்றது…

நினைவுகளை பின்னோக்கி பார்க்கையில்
நினைவுகள் சுகிக்கத்தான் செய்கின்றது…

நம் முதல் முத்தத்தின் தித்திப்பு
இன்னும் என் உதடுகளில் குறையவில்லை…
மாறாக
வருடங்கள் தான் கழிகின்றது வாழ்நாளில்…

குமரிமுனை செல்கையில்
கடங்கரை அலைகள் – என்
கால்கள் தொட்டுச்செல்கையில்
என் இதயம் தட்டி
உன் முதல் வேண்டுகோளையே
நினைவேற்றத்தவறிய குற்றவாளி என்று
என்னை சொல்வதாகவே உணர்கின்றேன்…
நீ மட்டும் மறந்திருப்பாயா?!…

கடலெனவற்றாத உன் அன்பும்
நட்சத்திரமாய் பூக்கும் உன் புன்னகையும்
காதலில்
குற்றங்களும் குறைகளும்
மறக்கப்பட வேண்டியவை என்று
புது இலக்கணம் உரைக்கின்றது…

மோகம் முப்பதுநாள்
ஆசை அறுபதுநாள் என்று சொன்னவர்கள்
ஒருவேளை அறிந்திலரோ?!…
பாசத்திற்கும் காதலுக்கும்
முடிவில்லையென்று…

காட்டாற்று வெள்ளத்தை
கட்டுக்குள் வைக்கும் அணைக்கட்டு…
கட்டற்ற உள்ளங்களையும்
அன்பென்ற பந்தத்துள் கட்டிவைக்கும்
திருமணம்.

உறவுகளை
பணமும் பரிசுகளும் கொண்டு
வளர்ப்பதைத் தவிர்த்து
அன்புகொண்டு வளர்த்தால்
நாம் வறுமையுறினும் – அது
என்றும் பசுமையாய் தழைத்தோங்கும்…

பகைவர்களுக்குள் வாள்வீச்சு இருக்கலாம்
உறவுகளுக்குள் வாய்வீச்சு எதற்கு?!…
தண்ணீரும் நாணலும் போல
ஒன்றுக்கொன்று இசைவாக இருப்பதே
எப்போதும் நலம்
எந்நாளும் உறவுக்கு பலம்.

நாளைய நினைவுகள் கூட
சுகமாகவே இருக்கும்…
இன்றைய நினைவுகளை
சுகமாக்கிக் கொண்டால்…

நினைவுகளை பின்னோக்கி பார்க்கையில்
நினைவுகள் சுகிக்கத்தான் செய்கின்றது…
* * * * *

8 மறுமொழிகள்

  1. துளசி கோபால் சொன்னது,

    ஏப்ரல் 23, 2007 இல் 1:57 மு.பகல்

    வாழ்த்து(க்)கள்.

    மனம்போல வாழ்வு இனிதே அமையட்டும்.

  2. காட்டாறு சொன்னது,

    ஏப்ரல் 23, 2007 இல் 7:31 மு.பகல்

    வாழ்த்துக்கள் முதலில்.

    //பகைவர்களுக்குள் வாள்வீச்சு இருக்கலாம்
    உறவுகளுக்குள் வாய்வீச்சு எதற்கு?!…//
    சிந்திக்க வைக்கும் வரிகள்

    //நினைவுகளை பின்னோக்கி பார்க்கையில்
    நினைவுகள் சுகிக்கத்தான் செய்கின்றது…//
    என்றென்றும் இனிக்க வாழ்த்துகிறேன்

  3. Prabakar சொன்னது,

    ஏப்ரல் 23, 2007 இல் 1:04 பிற்பகல்

    very good one.

  4. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 30, 2007 இல் 12:08 பிற்பகல்

    நல்ல கவிதை நண்பரே.

  5. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 30, 2007 இல் 12:10 பிற்பகல்

    நண்பரே.. ஒரு கேள்வி… காணியாறு, தாமிரபரணி, காணிநிலம் .. இந்த தளத்தின் இணைப்புகளை எப்படி இங்கே கொண்டு வந்தீர்கள் ?? படைப்புகளுடன் ?? Side Bar ல் ?

  6. ஏப்ரல் 30, 2007 இல் 1:27 பிற்பகல்

    நண்பர் அவர்களுக்கு,
    Dash Board-க்கு சென்று Presentation தெரிவு செய்யுங்கள்.
    இப்போது தெரியும் Sidebar -க்கு கீழ் வரிசைப்படுத்தப்பட்டுள்ள RSS1…RSS5 வரை உள்ளவற்றில் தங்களுக்குத்தேவெயான url மற்றும் தளத்தின் பெயர், எத்தனை தலைப்புகள் தெரியவேண்டும் என்பதை குறிப்பிடுங்கள் அது தங்களின் தளத்தில் Side Bar-ல் தெரியும்.

  7. janasara சொன்னது,

    மே 3, 2007 இல் 11:11 மு.பகல்

    மிக்க நன்றி நண்பரே…

  8. சேவியர் சொன்னது,

    மே 3, 2007 இல் 11:13 மு.பகல்

    //நண்பர் அவர்களுக்கு,
    Dash Board-க்கு சென்று Presentation தெரிவு செய்யுங்கள்.
    இப்போது தெரியும் Sidebar -க்கு கீழ் வரிசைப்படுத்தப்பட்டுள்ள RSS1…RSS5 வரை உள்ளவற்றில் தங்களுக்குத்தேவெயான url மற்றும் தளத்தின் பெயர், எத்தனை தலைப்புகள் தெரியவேண்டும் என்பதை குறிப்பிடுங்கள் அது தங்களின் தளத்தில் Side Bar-ல் தெரியும்.//

    நன்றி. பார்த்துவிட்டு சொல்கிறேன் :)


மறுமொழியொன்றை வழங்குக