காதல் (அ, ஆ…கவிதைகள் – 16)

அன்பால் வளர்வது காதல்
ஆசை தருவது காதல்
இருவரை இணைப்பது காதல்
ஈருடல் ஓருயிராவது காதல்
உண்மை உரைப்பது காதல்
ஊக்கம் தருவது காதல்
எதிர்ப்பை வெல்வது காதல்
ஏழ்மை பாராதது காதல்
ஐயங்கள் இல்லாததே காதல்
ஒற்றுமை வளர்ப்பது காதல்
ஓரினமாய் இணைப்பது காதல்
ஔசித்தியம் வளர்ப்பதும் காதல்.

* * *

இளமை (அ, ஆ…கவிதைகள் – 15).

அன்புக்கு எப்போதும் இளமை
ஆசைக்கு எந்நாளும் இளமை
இளங்காலைச் சூரியன் இளமை
ஈகைகுணத்தான் புகழ் இளமை
உருவமில்லா உருவகம் இளமை
ஊடல்கொண்ட காதல் இளமை
எழில்கொஞ்சும் வாவிக்கு இளமை
ஏக்கமில்லாத மனதிற்கு இளமை
ஐயமற்ற கருத்திற்கு இளமை
ஒற்றுமை சமூகத்திற்கு இளமை
ஓடஓட உடலுக்கு இளமை
ஔபத்தியம் உலகிற்கு இளமை.

* * *

அழகு (அ, ஆ…கவிதைகள் – 14)

அம்மா உயிர்களுக்கு அழகு
ஆண்டவன் உலகிற்கு அழகு
இயற்கையின் சமநிலை அழகு
ஈகைகுணம் மனிதனுக்கு அழகு
உயர்வுள்ளல் எல்லோர்க்கும் அழகு
ஊக்கம் ஆண்மைக்கு அழகு
எவரெஸ்ட் சிகரங்களில் அழகு
ஏமாற்றமில்லாத வாழ்க்கை அழகு
ஐஸ்வர்யம் வீட்டிற்கு அழகு
ஒருமை நட்பில் அழகு
ஓருயிராதல் காதலில் அழகு
ஔவைசொல் தமிழுக்கு அழகு.

* * *

அழுவதற்கா பிறந்தோம்…(அ, ஆ…கவிதைகள் – 13)

அழுவதற்கா பிறந்தோம் மண்ணில் – நாடு
ஆண்ட தமிழினம் தாழ்வதும் முறையோ?…
இன்றைய இழப்புக்களை வாழ்வில் மறவோம்
ஈடில்லாதது தமிழ் இனம் என்பதறிவோம்
உத்தமர்தான் எம்மக்களென்று உலகிற்கு பறைவோம்
ஊனமான உள்ளங்களுக்கும் உரமூட்டுவோம்
எதிர்நிகர் யாருமில்லையென உயர்வோம்
ஏற்றம்பெற உலகத்தின் அறிவனைத்தும் தெரிவோம்
ஐயமில்லா தெளிவு நிலை பெறுவோம்
ஒன்றே மனிதகுலம் என்பதை புகல்வோம்
ஓம்பா செயல் செய்வோரை இகழ்வோம்
ஔவியம் பேசல் எந்நாளும் தவிர்ப்போம்.

* * *