பள்ளிக்குச்செல்லும் பாலகா என் பாட்டை கேளடா
துள்ளித்திரியும் வயதடா நீ துடிப்பாய் பொழுதும் விளையாடடா
கள்ளமறியா மனதடா அதில் கயமைக்கு இடம் ஏதடா
வெள்ளமுனது வேகமடா வேண்டா செயல்களை நுரையாய் கரையொதுக்கிடடா.
காலையில் தினமும் துயிலெழுந்து கருத்தாய் படித்திடடா
மாலையில் உடல் அயரும்வரை திறம்பட விளையாடடா
கலைகள் பலதேடி வழுவற கற்று தேர்ந்திடடா
மலைகள் கூட உன் முன்னே மடுதானடா.
திரைப்படம் பார்ப்பதில் மகா தவறொன்றும் இல்லையடா
திரையிட்டது உன் கருத்தை மறைப்பது தவறடா
இரசிகனென்று சொல்லி வீணே அலைவது கரையடா
இரையாய் அறிந்தே நீ அழிவது முறையில்லையடா.
அரசுகள் வேண்டும் நாட்டை முறையாய் ஆள்வதற்கடா
அரசியல் ஞானமும் வேண்டும் தலைவனாய் தேர்ந்திடடா
அரைவயிறு கஞ்சின்றி தொண்டராய் திரிவதில் பெருமையென்னடா
கரைபட்ட மனிதனை தலைவனென்று ஏற்பது தவறடா.
முளைவிடும் போதே களை எதுவென்று அறிந்திடடா
களைகளை அப்போதே வேரறுத்து முற்றாக அழியடா
பிழைகளை சீர்துக்கி ஆராய்ந்து திறம்பட திருத்தடா
நாளைய பாரதத்தின் மணி மகுடம் நீயடா.
* * * * *
Ms.bala சொன்னது,
ஆகஸ்ட் 13, 2007 இல் 9:39 மு.பகல்
//அரைவயிறு கஞ்சின்றி தொண்டராய் திரிவதில் பெருமையென்னடா
கரைபட்ட மனிதனை தலைவனென்று ஏற்பது தவறடா.
முளைவிடும் போதே களை எதுவென்று அறிந்திடடா
களைகளை அப்போதே வேரறுத்து முற்றாக அழியடா
பிழைகளை சீர்துக்கி ஆராய்ந்து திறம்பட திருத்தடா//
Fantastic lines. Super. Thanks for your mail.
கலை அரசன் மார்த்தாண்டம் சொன்னது,
ஆகஸ்ட் 13, 2007 இல் 9:52 மு.பகல்
மிக்க நன்றி பாலா.