அரவிந்தனே எம் மருமானே
ஆண்டு ஒன்றை கடக்கின்றாய்
இன்முகமாய் முகம்பார்த்து சிரிக்கின்றாய்
ஈசிதனாய் வளர்வாய் நீ…
உகசூரியர் மெச்சிட மிளிர்வாய் நீ
ஊற்றங்கோலாவாய் பலருக்கு நீ
எஞ்ஞான்றும் நல்லன புரிவாய் நீ
ஏனாதியாய் அறிவிற்சிறப்பாய் நீ
ஐமுகனின் பாதம் தொழுவாய் நீ
ஒட்டலர் சூது வெல்வாய் நீ
ஓங்காரம் தினம் ஓதிடல்வேண்டும் நீ
ஔதாரியம் மிகுந்து சிறப்பாய் நீ.
* * *
எம் மருமானே…(அ, ஆ…கவிதை – 17)
ஆகஸ்ட் 18, 2007 இல் 11:55 பிற்பகல் (அ,ஆ...கவிதைகள், உணர்வுகள்)
Tags: Alphabetic Kavithai, அகரவரிசைக் கவிதை