நட்பு

நல்லவை நண்பர்க்கு நினைத்தலும்
நயம்பட நடப்பை நவிலலும்
நன்நெறி நடவா நாளில்
நண்ணுநரை நல்லாங்கு நடத்துதலும்
நண்ணார் நடக்கை நன்குறைத்தலும்
நட்பை நற்பயிராய் நெடிதுயர்த்தலும்
நட்புக்கு நண்பர்செய்யும் நற்கதியாம்.

* * *

அருஞ்சொற் பொருள்:

நண்ணுநர் – நண்பர்
நண்ணார் – பகைவர்
நெடிது – நீண்டு
நவில்தல் – சொல்லுதல்
நல்லாங்கு – நன்று, நன்கு

***