சோகத்தில் புலம்பினான் விவசாயி
வந்தும் கெடுக்கின்றது வராமலும் வாட்டுகின்றது…
மழை.
ஃ
இதயம் பிளந்து சந்தோசித்தான் ஒருவன்
இதயம் பிளவுபட்டவளும் நிம்மதியாய் சுவாசித்தாள்
உழுத நிலம்.
ஃ
பயிர்வளர்ப்பது விவசாயின் தர்மம்
பிடுங்கி அழிப்பதும் தர்மம்தான்
வயலில் களை.
ஃ
சந்தோசமாக இருந்தது விவசாயிக்கு
குவிந்திருந்த நெற்மூட்டை கண்டு;
சந்தைவிலை அறியும்வரை.
ஃ
புலம்பல்கள் இன்னும் ஓய்தபாடில்லை!…
எவன் பொருளுக்கு எவன் விலை வைப்பது?…
ஏமாளியாய் விவசாயி.
ஃஃஃ
Ms.bala சொன்னது,
செப்டம்பர் 27, 2007 இல் 1:23 பிற்பகல்
இதயம் பிளந்து சந்தோசித்தான் ஒருவன்
இதயம் பிளவுபட்டவளும் நிம்மதியாய் சுவாசித்தாள்
உழுத நிலம்
So nice of you. This is called contraversy. (Muran badugal) Super.