அசோகர் மட்டுமா குளங்களை வெட்டினார்?!
நாங்கள் வீடுதோரும் குட்டைகளை பராமரிக்கின்றோம்!…
கொசு வளர்க்க…
ஃ
மின் மட்டையோடு தான் சுற்றுகின்றேன்;
எந்த பக்கமிருந்தும் தாக்க வரலாம்…
கொசுக்கள்.
ஃ
தினமும் தீபாவளி வேட்டுத்தான்
மின் மட்டையில் பட்டுவெடிக்கும்
கொசுக்கள்.
ஃ
அழிக்க அழிக்க வருகின்றது…
எமன் தேசத்து படைகளோ?!…
கொசுக்கள்.
ஃ
ரீங்காரமிட்டு வரும் கொசுக்கள்
இராகத்தோடு சொல்லிவிட்டுப் போகும்!…
மாண்டுவிட்டது மாநகராட்சியென்று…
ஃஃஃ
மாண்டுவிட்டது மாநகராட்சி?!…ஹைகூ.
செப்டம்பர் 18, 2007 இல் 7:53 மு.பகல் (பொதுவானவை, ஹைகூ)