இறைவனின் சிலைவடித்த மனிதனைப் பார்க்கின்றேன்;
மனிதனைப் படைத்த இறைவன் எங்கே?!…
விடையில்லா வினாக்கள்.
ஃ
இறைவன் கருணை வடிவானவன்;
மன்னிக்கும்படி மனமுருகி வேண்டினான்…
சிலை திருடியவன்.
ஃ
பாவங்கள் கரைந்துபோக காணிக்கை செலுத்தினான்
உண்டியலில் விழுந்த காசு சொல்லி நகைத்தது
நான் லஞ்சத்தில் வந்த காசென்று.
ஃ
உளியின் உரசலை பொறுத்திருந்தது கல்லாக…
அமைதியாக ஆசிர்வதித்துக் கொண்டிருக்கின்றது இப்போது…
கடவுள் சிலையாக….
ஃ
தெய்வம் மன்னித்துக்கொண்டுதான் இருக்கின்றது
தவறுகள் செய்யும் போதெல்லாம்;
அன்னையின் வடிவாக…
ஃஃஃ