கசாப்புக்கடைக்காரன் – ஹைகூ

எமனின் வாகனமென்று நாம் ஒதுங்க;
எமன் வருகிறானென்று எருமை ஒதுங்கியது!…
எதிரே கசாப்புக்கடைக்காரன்.

விளைந்த பொருளுக்கு விலை சொல்லலாம்
விளைவித்தவனுக்கு ஈடேது விலை…
தாய்மை.

திருவிழாவில் சாமிக்கு படையல்…
விதவிதமாய் பண்டம் பலகாரங்களின் அணிவகுப்பு….
சாமி சாப்பிடமாட்டாரென்ற தைரியத்தில்.

ஒன்றரை மணிக்கு மளிகைவாங்க போகவேண்டும்
அலுவலக்த்தில் நுளையும் போதே மனக்கணக்கு…
அரசு ஊழியர்.

சொன்னதையை திரும்பத் திரும்பச் சொன்னான்
அறிந்ததையே சொல்லும் கிளிப்பிள்ளையாக…
விற்பனைப் பிரதிநிதி.

சொர்க்கம் தேடும் மனிதர்கள் – ஹைகூ

அரிசிக்காக காத்துக் கிடக்கின்றார்கள்
கைநெல்லை உதரி எரிந்துவிட்டு…
சொர்க்கம் தேடும் மனிதர்கள்.

உயிர்கள் உதிர்ந்து கொண்டிருந்தது…
மனிதனின் நல்வாழ்விற்காக போராட்டமாம்…
பந்த்?!…

சுகாதாரம் பற்றிய மந்திரியின் மேடைப்பேச்சு…
முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்தார்;
புறங்கையால்….

சிதறிக்கிடக்கும் தானியங்கள்;
ஒன்றாய் சேமித்துவைக்கும் எரும்புகள்….
எத்தனையாவது அறிவு எரும்புக்கு?!.

சிக்கனம் கஞ்சத்தனம் அல்லவே…
யாருக்கு லாபம்?!…
எச்சிக்கையால் காகம் ஓட்டுவதில்.

பிறந்த நாள்….

அரும்புதல் எப்போதும் அழகானது
பூக்களின் மென்மையில்
பூரிக்காதவர்கள் இருப்பது கடினம்…

மனிதனின் பிறப்பும்
மலரின் அரும்புதல் போல்தான்…
ஆனால்
மழலையாய் இருக்கும்போது மட்டுமே
மென்மையாய் இருக்கின்றோம்.

வளர்ச்சியின் வேகத்தில்
மென்மையை இழக்கின்றோமா?!…
மறக்கின்றோமா?!…
எதுவோ ஒன்று…
ஆனால்
நாம் இறுகிப்போகின்றோம்..
காலவெள்ளத்தில் சிக்கிய
கல்லாக இறுகிப்போகின்றோம்…

காற்றின்
வேகத்தில் சிக்கி தவிக்கும்
இலைகளாக கிழிபடுகின்றோம்…
சில வேளைகளில்
திசைமாறும் சிறு இலையாய்
வாழ வழிதெரியாது தவிக்கின்றோம்…

கிழிந்துபோன, இறுகிப்போன
இதயங்களும்
மீண்டும் புதுமலராய்
பூரிக்கத்தான் செய்கின்றது…
பூக்களின் இதழ்களின் மென்மையை
உணரத்தான் செய்கின்றது…
நம்பிக்கையின் ஆணிவேர் கூட
புதிதாய் நெஞ்சில்
துளிர்க்கத்தான் செய்கின்றது…

வருடம் ஒருநாள் வரும்
பிறந்த நாளில்!…

ஃ ஃ ஃ

சிம்புவா?!….இப்படி….


சிலரைப்பற்றி நாம் கேள்விப்படுவது ஒன்றாக இருக்கும் ஆனால் அவர்களின் உண்மை உரு அதற்கு நேர்மாராக இருக்கும். இதற்கு எனக்கு நல்ல ஒர் உதாரணம் சமீபமாக கிடைத்தது.

உண்மையில் சிம்புவை, அதாங்க லிட்டில் சூப்பர் ஸ்டாரைப் (இந்த பட்டம் அவருக்கு பொருந்தும் என்பது என் தாழ்மையான எண்ணம்) பற்றி செய்தித்தாள்களில் படித்த போது எனக்கு அவரை ஒரு திமிர் பிடித்த பையனாகத்தான் எண்ணத்தோன்றியது.

ஆனால் சமீபகாலமாக விஜய் டீவியில் நடந்து வரும் ஜோடி நம்பர் – 1 சீசன் -2 நடனப்போட்டி நிகழ்ச்சிக்கு சிம்பு மூன்று நடுவரில் ஒருவராக இருந்து செயல்பட்டு வருகின்றார். அவரது பக்குவத்தையும் பொறுமையையும் பார்க்கும் போது இது நாம் பத்திரிகைகளில் படித்த சிம்புவா என எண்ணி ஆச்சரியப்பட்டு இருக்கின்றேன். காரணம் இந்தி Star Plus சேனலில் நடக்கும் இது போன்ற போட்டி நிகழ்ச்சிகளையும் பார்த்து இருக்கின்றேன். அதில் பங்கு பெறும் நடுவர்களில் காட்டு கத்தலையும் பக்குவமற்ற நிலையையும் பார்த்து வேதனைப்பட்டு இருக்கின்றேன்

எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் நேற்று (06.10.07) இரவு 8.00 – 09.00 மணிவரை நடந்த நிகழ்ச்சியில் சிம்பு நடந்து கொண்ட விதம், அவரின் பொறுமை, உண்மையான உள்ளம் அனைத்தும் வெளிப்பட்டு சிம்புவைப்பற்றிய எனது பழைய எண்ணங்களை தவிடு பொடியாக்கி விட்டது.

முடிந்தால் இன்று மதியம் 03.00 மணிக்கு மறு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள். உங்களுக்கே புரியும் நான் சொல்வதன் உண்மை.

வாழ்த்துக்கள் சிம்பு….

சிம்புவின் இந்த மனம் இப்போதைய அரசியல் வாதிகளுக்கு இருந்தால் கண்டிப்பாக 2020-ல் நாம் நன்கு வளர்ந்த வல்லரசு நாடுதான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் சிம்பு.

சுயபரிசோதனை – ஹைகூ

மனிதனாக பிறந்தோம்….
மனிதனாக வாழ்கின்றோமா?!…
தேவை சுயபரிசோதனை.


மனிதனாயிருக்கும் போதே மறுபரிசீலனை செய்துகொள்…
மதங்களை வளர்த்தது மனிதம் வளர்க்க;
தேவையா?!… மனிதம் துறக்க மதங்கள்.


மிருககுணம் படைத்தவனென்று யாரையும் திட்டாதீர்…
எங்காவது யாராவது கண்டதுண்டா?!…
குணப்பிரள்வோடு வாழும் மிருகத்தை.


பகுத்தறிவென்பது வியாபாரப் பொருளாகிவிட்டது!….
மனிதனின் உணர்வுகளையே உணராதபோது…
எதைப் பகுத்தறிவீர்கள்?!…


இழிவாக இருக்கின்றது இந்த கொடுஞ்செயல்கள்…
எந்தக்கடவுள் கேட்டார் படையல்
குண்டுகளால் சிதறும் உடல்கள்…