தாமரைக்கண் விரித்து
ஓரக்கண்ணால் பார்த்து
பூவாய்ச் சிரிக்கின்றாய்…
முகம் கோணி
முறுவல் செய்து
சாடை பேசுகின்றாய்…
சில நேரம்
நா கடித்து
உன்கோபம் காட்டுகின்றாய்…
தென்றலாய் நெருங்குமுன்னை
தீண்ட நினைக்கையில்
புயலாய் ஒதுங்குகின்றாய்…
ஆண்டுகள் கடக்கின்றது…
உன்செல்ல சேட்டைகள்
குறையவே இல்லை…
இளமையோடு தொடரட்டும்
உன் செல்லச் சிணுங்கல்கள்
ஆண்டுகள் அறுபதை கடக்கும்போதும்…
ஃஃஃ
bala சொன்னது,
ஜனவரி 8, 2008 இல் 3:00 பிற்பகல்
Hai,
Chella Sinungalgal is superbh. When i read this, i also remember some previous sweet days. Unmaiyeleye ithu oru chella sinungal than.
கலை அரசன் மார்த்தாண்டம் சொன்னது,
ஜனவரி 8, 2008 இல் 7:43 பிற்பகல்
நன்றி தோழியே.