காகம் (ஹைகூ)

உறவினர்கள் யாராவது வருவார்களாம்,
மரத்திலிருந்து கரைந்து கொண்டிருந்தது
பசிமயக்கத்தில் காகம்.

நீயும் நானும் உணரவேண்டும்,
ஒற்றுமையாய் இனத்தோடு பகிர்ந்துண்ணும்
காகம்.

உணவு வைத்து காத்திருப்பர்
முன்னோர்கள் வருவார்களா என்று
காக்கை வடிவில்.

கைமாறு அற்றக் கடப்பாடு,
குயில் முட்டைக்கு அடைகாக்கும்
காகம்.

நேசர்படை சூழ்ந்து நிற்கும்
கூடுவிட்டகன்று பறக்கப் பழகும்
காக்கைக் குஞ்சு.

ஃஃஃ

1 மறுமொழி

  1. shankar சொன்னது,

    செப்டம்பர் 8, 2008 இல் 3:14 பிற்பகல்

    super


மறுமொழியொன்றை வழங்குக