காற்று (ஹைகூ).

மேகமற்று துடைத்துவைத்த வானம்
வரண்டபூமியை குளிப்பாட்டிச் சென்றது மழை
எங்கோ தோன்றிய புயல்.

பொட்டிழந்த நெற்றியாய் பூமி
மரங்களையும் பயிர்களையும் அழித்துச்சென்றது
புயல் காற்று.

வியர்வைப்பூத்து நிற்கும் இலைகள்
தென்றல் தழுவவில்லையோ இரவில்?
இலையில் பனித்துளிகள்.

அசையும் மரத்தைச்சுற்றிப் பறந்தது குருவி
நுணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கும் கூடு
கலைக்காதிருக்க வேண்டும் காற்று.

எல்லாம் அதன் செயல்
எந்த இடத்தில் உட்காரவைக்குமோ?…
சருகைப் புறட்டும் காற்று.

ஃஃஃ