உன்னை நேசித்தது மனது
இருவர் வயதும் பொருந்தாத போதும்;
நட்பு.
ஃ
சந்தித்து நாட்களாகிவிட்டது
வேறு வேறு திசைகளும் சென்றாகிவிட்டது
குறையாமலேயே இருக்கின்றது நட்பு.
ஃ
குளம் வற்றிப் போனது,
வண்டலோடு ஒட்டிக்காய்ந்தது கருவாடுகள்;
மீனுக்கும் நீருக்குமான நட்பு.
ஃ
நாணல் கரையைக் காத்தது
ஓடைநீர் நாணலை தழுவிச்சென்றது;
பரஸ்பர நட்பு.
ஃ
எங்கும் வியாபித்திருந்தனர் என் உறவுகள்
உடன் பிறந்தோர் அதிகமில்லாத போதும்
நட்பின் வட்டம்.
ஃஃஃ
Vishnu சொன்னது,
பெப்ரவரி 6, 2008 இல் 1:25 பிற்பகல்
நட்பிற்க்கான ஹைக்கூக்கள் அனைத்தும் இனிமை …நண்பரே …
வாழ்த்துக்களுடன்
இனிய தோழன் விஷ்ணு …
sathish kuamr சொன்னது,
அக்டோபர் 9, 2008 இல் 5:23 பிற்பகல்
eppadi ippai ellam yosikireenga… ungal sindhanai aruvi thodara en vaazhthukkal
mathee சொன்னது,
நவம்பர் 26, 2008 இல் 5:29 பிற்பகல்
kavithai..kavithai… natpin arumaiyai alagaaga solliyullirkal.. vaalthukal! innum varaiyungal..
sunthary சொன்னது,
மே 7, 2009 இல் 5:37 பிற்பகல்
kavithai sirappu ; naan rasittu,rusittu padithten , paravasamadainten
shunthary ,malaysia
swety சொன்னது,
ஆகஸ்ட் 16, 2009 இல் 11:38 மு.பகல்
hi, kavithai, aha mehavum naan rasiththu padithean mehavum alahana varikal enni nadpin allathittke kodupoividdathu