அதிகாலைச் சூரியன்
பயத்தில் கண்விழிக்கும் அளவு
காச் மூச் சத்தம்,
படுக்கையில்
கொஞ்சூண்டு மூச்சா போனதால்…
பசித்த வயிற்றுக்கு
பசியாற பால் வேண்டாமா?…
சிணுங்கி மாராப்பு சேலை பற்றி
அம்மாவின் கவனம் கவரும்
செல்லச் சிணுங்கல்கள்…
சிறு சிறு குறுகுறு நடையிட்டு
குடும்பத்தார் உள்ளத்தை
மொத்தமாய் குத்தகைக்கெடுக்கும்
குரங்குச் சேட்டைகள்…
எங்கெங்கோ
ஏகாந்தமாய் நோக்கி
கை கால் ஆகாயத்தில் உதைத்து
கன்னக் குழி மிளிர
மெல்லமாய் சிரித்து
சிந்தை கொள்ளைகொள்ளும் குறும்பு…
முற்றத்தில் சிறு நீர் கழித்து – அதில்
சிறுகை நீட்டி தாளம் தட்டி
மண்ணோடு சேர்த்து மாவு பிசைந்து
பூ உடலெங்கும்
சந்தணம்போல் பூசி மகிழ்ந்தும்…
காணும் பொருள் உடைத்து
பூரித்துப் பொங்கி
பூகம்பம் செய்தும்….
புயல் விட்ட பூமியாய் களைத்து ஓய்ந்து
புன்னகை பூத்து தூங்குகையில்
மழலை அழகு…
பூக்களில் உறங்கும் மௌனங்கள்.
ஃஃஃ
திகழ்மிளிர் சொன்னது,
ஜனவரி 11, 2008 இல் 6:39 மு.பகல்
/காணும் பொருள் உடைத்து
பூரித்துப் பொங்கி
பூகம்பம் செய்தும்….
புயல் விட்ட பூமியாய் களைத்து ஓய்ந்து
புன்னகை பூத்து தூங்குகையில்
மழலை அழகு…
பூக்களில் உறங்கும் மௌனங்கள்./
அழகான வரிகள்
வாழ்த்துக்கள்
மனம் கனிந்த இனிய பொங்கல் ந்ல்வாழ்த்துக்கள்
cheena (சீனா) சொன்னது,
ஜனவரி 11, 2008 இல் 8:18 மு.பகல்
நண்ப, நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறேன். கவிதை அருமை. மழலையைப் பற்றிய கற்பனை – ஆகா ஆகா – உள்ளம் மகிழ்கிறது. இப்போட்டிக்கு வந்திருக்கும் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. கற்பனைத் திறன் அதிகம் நமக்கு.
இனிய புத்தாண்டு மற்றும் தமிழர் திரு நாள் நல் வாழ்த்துகள்
சேவியர் சொன்னது,
ஜனவரி 11, 2008 இல் 10:19 மு.பகல்
நண்பரே நலமா ? சிறிது இடைவெளிக்குப் பின் வருகிறேன்.
//புயல் விட்ட பூமியாய் களைத்து ஓய்ந்து
புன்னகை பூத்து தூங்குகையில்
மழலை அழகு…
பூக்களில் உறங்கும் மௌனங்கள்.//
வெகு அழகு !
கலை அரசன் மார்த்தாண்டம் சொன்னது,
ஜனவரி 12, 2008 இல் 5:17 பிற்பகல்
மிக்க நன்றி நண்பர், திகழ்மிளிர்.
கலை அரசன் மார்த்தாண்டம் சொன்னது,
ஜனவரி 12, 2008 இல் 5:19 பிற்பகல்
மிக்க நன்றி நண்பர் சீனா அவர்களே, தங்களின் விமர்சனத்தைக் கண்டதும் மிக மகிழ்ந்தேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கலை அரசன் மார்த்தாண்டம் சொன்னது,
ஜனவரி 12, 2008 இல் 5:21 பிற்பகல்
//நண்பரே நலமா ? சிறிது இடைவெளிக்குப் பின் வருகிறேன். //
ஆம் நண்பரே மிக்க நலம்.
தங்களின் பின்னூட்டத்தைக் கண்டதில் மிக மிக மகிழ்ந்தேன்.
தாங்கள் நலம் தானே.
எல்லா நலமும் பெற்று நலமோடு வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
நவன் சொன்னது,
ஜனவரி 13, 2008 இல் 9:09 பிற்பகல்
மழலைப் பூக்களில் உறங்கும் மவுனங்களுக்கு இணையும் உண்டோ?
நல்ல கவிதை.
நானும் இன்று இதே தலைப்பில் பதிவிடுகிறேன்..
http://panithulligal.blogspot.com/
கலை அரசன் மார்த்தாண்டம் சொன்னது,
ஜனவரி 14, 2008 இல் 11:42 பிற்பகல்
மிக்க நன்றி நவன்.