சின்னச் சின்னக் குளங்கள்
சந்தோசமாய்க் குளிக்கும் சிட்டுக்குருவிகள்
சாலைக்குழிகளில் தேங்கும் மழைநீர்.
ஃ
தூக்கம்கலைந்த சோகமான இரவுகள்
இனிமையாய் தரையில் ஜலதரங்கம் வாசித்தது,
பொத்தலில் வழிந்த மழைநீர்.
ஃ
இயற்கையின் இன்னிசைக் கச்சேரி
இசையமைக்கக் கற்றுத்தந்தது யார்?…
குளத்தில் பட்டுத்தெரிக்கும் மழைநீர்.
ஃ
வானம்பார்த்து ஏரோட்டும் கோடைகாலம்
நம்பிக்கையின் ஆசிர்வாதமாய் அமிர்தமாய் ருசித்தது
உதட்டில் விழுந்த ஒருதுளி மழைநீர்.
ஃ
வழிமேல் விழிவைத்து காத்திருந்தது;
சிந்தும் துளிகளில் எந்தத்துளி முத்தாகுமோ?…
மழைநீரை எதிர்நோக்கும் சிப்பி.
ஃஃஃ
பாச மலர் சொன்னது,
ஜனவரி 13, 2008 இல் 1:07 பிற்பகல்
குட்டிக் கவிதைகளுக்குப் பெரிய பாராட்டுகள்