நாங்கள்
மரத்தடி ராஜாக்கள் – வாடிய
ரோஜாக்கள்.
எங்களின்
உடலை மூடி
மறைப்பதோ
சிலந்தி வலைகளே!…
நிதம் நிதம்
கண்ணீர்த் துளிகள்
இதுவே
எங்களின் உடல் கழுவும்
ஆறுகள்!.
நாங்கள்
கைகளில் ஏந்துவது
திருவோடுகளா? – இல்லை
எங்கள் முன்னோரின்
மண்டையோடுகளே!
நாங்கள் கேட்பது
மாடிகள் அல்ல…
எங்களின் கட்டைசாய
ஒட்டுத் திண்ணைகளே!!…
ஃஃஃ
நன்றி : ‘கின்னஸ்’ மாத இதழ், நாகர்கோவில்.
முதன்முதலில் பத்திரிகையில் வந்த எனது கவிதை.
வெளிவந்த வருடம்: 1989.
புத்தகத்தின் முதல் பக்கம் கிழிந்து விட்டாதல் மாதம் தெரியவில்லை.
franciscyril சொன்னது,
மார்ச் 13, 2011 இல் 8:44 பிற்பகல்
very very super…………. i am like the kavithi ….first class kavithi ………
i am feel the kavithi…………….first time ……………….so,happy very happy….
i love u………..so much kavithi …………….
franciscyril சொன்னது,
மார்ச் 13, 2011 இல் 8:46 பிற்பகல்
i love u kavithi