எரிமலை வெடிக்கட்டும் இதயம் துடிக்கட்டும்
சுதந்திர தாகம் பிறக்கட்டுமே…
சூழ்ச்சிகள் அழியட்டும் துன்மதி ஒழியட்டும்
சுதந்திரம் இன்றே விடியட்டுமே…
மனிதராய்ப் பிறந்தோம் மதியுடன் வளர்ந்தோம்
மதம் கொண்ட இன வெறிகொண்ட
மனிதன் அடக்கிட நினைப்பது சரிதானோ…
மண்புழுவென நாமும்மடிதல் முறைதானோ…
சுகம்பெற வாழ்வினில் இன்பம் துய்த்திட
சுரத்தினை இழப்பதும் சரியோ?…
சிரத்தினை தாழ்த்தி சீருடல் குறுக்கி
சீர்கெட வாழ்வது தகுமோ?…
பிறப்பது ஒருமுறை இறப்பதும் ஒருமுறை
பசலையாய் வாழ்வதுவா நிறை
பறவையாய் பறந்து சுதந்திரக் காற்றை
பழகிடல் தானே முறை.
வா…வா… தோழா வா…வா…
தீப்பந்தம் எடுத்து வீணே சுணங்கும்
உளத் திரியினை கொழுத்து…
சுதந்திரதீபம் ஒளிரட்டும் தீமைகள் எரியட்டும்
நாளையப்பொழுது நமதாய் விடியட்டும்.
ஃஃஃ
cheena (சீனா) சொன்னது,
பெப்ரவரி 2, 2008 இல் 8:41 மு.பகல்
வாழ்வது ஒருமுறை – வாழ்த்தட்டும் தலைமுறை – அதன் பிண்ணனி தான் இக்கவிதை
Vishnu சொன்னது,
பெப்ரவரி 6, 2008 இல் 1:22 பிற்பகல்
அருமையான கவிதை ….
அனைவரும் உணரவேண்டியது
அழகான கவிதையாக ..
வாழ்த்துக்களுடன்
என்றும்
இனிய தோழன் விஷ்ணு …