அசுணம் அறியும் இசையின் தன்மை
ஆண்மா அறியும் உயிரின் மெய்மை
இரவுக்குத் தெரியும் இழி செய்து
ஈனமாய் உடல்வார்க்கும் ஊனர் கயமை
உதிரம் உரையும் குளிரில் உறக்கமின்றி
ஊனின்றி காப்பவன் அறிவான் நாட்டினருமை
எறும்புக்குத் தெரியும் உழைப்பின் பெருமை
ஏர்உழவனுக்குத் தெரியும் வியர்வையின் அருமை
ஐயுணர்வு மிக்கார் உள நிலைமை
ஒரு போதும் தாழாத வளமை
ஓர்பு குறைக்கும் சிறுமை
ஔடதம் அழிக்கும் உடலின் நோய்மை.
ஃஃஃ
-
அருஞ்சொற்பொருள்.
அசுணம் – இசையறியும் பறவை
ஐயுணர்வு – ஐம்புலனறிவு
ஓர்பு – ஆராய்கை, எண்ணுகை
ஃஃஃ