ஆசை.


ஆசைக்கு அளவுண்டோ அளக்க புதுக் கோலுண்டோ
ஆசை பொன்மேற் கொண்டு ஆண்டவன்சிலைத் திருடுகின்றார்
பணம்மேல் ஆசை கொண்டே பச்சோந்தி ஆகின்றார்
பிணம் தின்னும் கழுகாக உலவித் திரிகின்றார்

நாகரீக ஆசை கொண்டே நஞ்சைக் கலக்கின்றார்
நகர்வலம் திரியும்போது காணும் பொருளுக்கு ஏங்குகின்றார்
பெண்மேல் ஆசை கொண்டே பித்தராகி அலைகின்றார்
பண்புகெட்டே கால மெல்லாம் பாரில் உலவுகின்றார்

காணும் பொருளுக்கு ஆசைகொண்டு அலையும் மாந்தரே
கணநேர ஆசை யகற்றி மலையென உயருங்கள்
அஞ்ஞான ஆசைதனை ஆண்டவன் அருள்கொண்டு ஒழித்து
மெஞ்ஞான அருள்பெற்றே மேன்மை எய்துங்கள்.

ஃஃஃ

கல்லூரியில் படிக்கும் போது எழுதியது.

எழுதிய நாள். 15.09.1988

மறுமொழியொன்றை வழங்குக