எந்நாளும் காதல் தினம்.
பெப்ரவரி 14, 2008 இல் 9:06 நான் (காதல்)
Tags: கவிதை, காதல், Kavithai, Love
தென்றலின் நேசம்
பூவிடத்தில்
வான்நிலவின் நேசம்
இரவிடத்தில்
வானவில்லின் நேசம்
மழையிடத்தில்
என்நேசமோ உயிரே
உன்னிடத்தில்.
நிரம்பிய குளம் ஒருநாள்
வற்றிப்போகலாம்
நியமனங்கள் ஒருநாள்
மாற்றப்படலாம்
காதலுக்கான நியமனநாளும்
மாறிப்போகலாம்
தமிழ் வருடப்பிறப்பு
நாள் போல.
காதலுணர்வு நியமனமற்ற
இதயத்தின் கீதம்
காதல் இயற்கையானது
பகலும் இரவும்போல;
மனதில் கவலைமறந்து
நாளும் கழிப்போம்
மலரும் நாளனைத்தும்
காதலுக்கான நாளென்று.
ஃஃஃ
R.REGHU சொன்னது,
பெப்ரவரி 20, 2008 இல் 12:33 பிற்பகல்
Best kavithai
R.REGHU-BANGALORE. சொன்னது,
பெப்ரவரி 20, 2008 இல் 12:35 பிற்பகல்
Very very butiful.
sweety சொன்னது,
மார்ச் 8, 2008 இல் 1:37 பிற்பகல்
Thanks for a fantastic poem for valentines day
sweety சொன்னது,
மார்ச் 8, 2008 இல் 1:38 பிற்பகல்
thanks for a poem for valentines day
suresh marthandam சொன்னது,
மார்ச் 8, 2008 இல் 9:25 பிற்பகல்
nengal oru karpaha verutcham thonda thonda kavithai surakum