மஞ்சள் வெயில் மாலையெலாம் நீதானா?
பஞ்சத்தில் வாடுவோர்க்கு சோலை நீதானா?
பிஞ்சுமனக் குழந்தையிடம் அன்பும் நீதானா?
வஞ்சக மனத்தின் வன்செயலும் நீதானா?
பாதி பேரை தினம் சிரிக்கவிட்டு
மீதி பேரை கண்ணீரில் மிதக்கவிட்டு
விதி யென்று உலகி லிருக்கும்
சதி காரன் இங்கே நீதானா?
கோயில் குளமெல்லாம் நீயிருப் பாயென்று
வாயில் உனையெப்போதும் பாடும் மனிதனையும்
பொய்யில் புரண்டெழுந்து உனையறியா ஊன
மெய்யரென இருவேறுமானிடம் படைத்தது நீதானா?
உண்மைக்கு இருளெனும் விலங்கிட்டு; வன்மைக்கு
வணங்கி வாழ்த்து கூறும் – இந்த
வேண்டா கலிகாலம் படைத்து – எனை
காண விட்ட கடவுள் நீதானா?.
ஃஃஃ
இந்த கவிதை 31.07.1989- ல் நான் கன்னியாகுமரி மாட்டம் ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் படிக்கும் போது வகுப்பறையில் ஆசிரியர் Graph Theory நடத்தும் போது பாட இடைவேளையில் எழுதியது.
ஃஃஃ
suganjan சொன்னது,
April 17, 2011 இல் 8:09 பிற்பகல்
Super Innum Podunka