அப்பா!
சிறுவயதில் உல்லாசமாய்
உன் தோள்மீது அமர்ந்து
ஊர் சுற்றிப் பார்த்ததும்
எங்களுக்கு காய்ச்சல் கண்டபோது
உடல் சூடு தணிய
உன் மார்பை
மெத்தையாக்கிய தருணங்களும்
வாலிப வயதில்
உலகவிசயங்களை தர்க்கம் செய்து
வாதிட்ட தினங்களும்
உன் வயோதிக காலத்திலும்
உற்றாருக்காகவும்
ஊருக்காகவும் ஏங்கித்தவித்த
உன்னோடு இனி
தர்க்கம் செய்யமுடியாத இடத்திற்கு
நீ சென்றிருந்தாலும்
நீ விட்டுச்சென்ற நினைவுகளும்
எழுதிவைத்து அச்சில் ஏற்றாமல்
விட்டுச் சென்ற கவிதைகளும்
உன்னை நினைவு படுத்தமட்டுமல்ல
உன் நினைவோடு
விவாதம் செய்யவும் செய்கின்றது.
இரண்டாண்டு மட்டுமல்ல
இரண்டாயிரமாண்டு ஆனாலும்
நினைக்கப்படுவாய்.
நீ மனிதன் மட்டுமல்ல கவிஞனுமல்லவா?…
உன் கவிதைகள்
உன்னை வாழவைக்கும் என்றும் உலகில்.
ஃஃஃ
கானா பிரபா சொன்னது,
ஜூலை 26, 2008 இல் 6:56 பிற்பகல்
உங்கள் அப்பாவின் நினைவுகள் கனக்க வைக்கின்றன. பிரிவில் தான் தெரிகின்றது இன்னும் அவரின் அருமை.
bashakavithaigal சொன்னது,
ஜூலை 26, 2008 இல் 10:57 பிற்பகல்
vaaZumbothu ellaa maganukum puripadaatha uravu athu.
vijaygopalswami சொன்னது,
ஜூலை 27, 2008 இல் 10:27 மு.பகல்
இனி ஒவ்வொரு நாளும் என் அப்பாவைக் கொண்டாட வேண்டும் என்று நினைக்க வைத்துவிட்டது உங்களது கவிதை…
naanal சொன்னது,
ஆகஸ்ட் 6, 2008 இல் 11:44 மு.பகல்
உண்மை தான் அப்பா என்கிற உறவுக்கு உண்மையில் ஈடு இணை இல்லை…
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 23, 2008 இல் 5:20 பிற்பகல்
அப்பாவின் நினைவுகளுக்குள் அமிழ்த்திவிட்டீர்கள்.
sathish kumar சொன்னது,
செப்டம்பர் 26, 2008 இல் 11:44 மு.பகல்
en appa irandhu oru varudam aagivittaddhu… ungal kavidhai padithu en kangal kalangi vittana…..ungal kavidhayai paditha vadhu petrorin arumai theriyatum… thandhayin anbai purindhu kolladhavargaluku… en endral naanum en thandhayai veruthu odhukinein avar arugil illa dha podhu ippodu azugirein… arumai therindhu
ponmudi சொன்னது,
அக்டோபர் 5, 2008 இல் 5:19 பிற்பகல்
Etha raathavathu thirunthatum yanooda kudikaara appaaa………
bala சொன்னது,
நவம்பர் 9, 2008 இல் 6:13 பிற்பகல்
pettra appavai marakatha ungal vazhvu endrum innimai anadhu pasumaiana ninaivugal ellorukkum undu…… by R.chithra rajan(anni)