மனம்

மனது

புயல் இல்லாத போதும்
திசையறியாது பறந்து கொண்டிருக்கின்றது…
கட்டுக்கடங்கா மனது.

கரைசேர்ந்திருக்குமோ கட்டுமரம்?
துடுப்பெய்த துணிந்திருந்தால்!…
துவண்ட மனம்.

காற்றிலலைந்து சலசலத்தது;
காய்ந்த பனையோலையாய்…
பயந்த மனது.

நினைத்ததெல்லாம் இனித்தது
வானவில்லாய் மறைந்தது
கற்பனை மனது.

மழையில் குடைபிடித்தது
நீரின் போக்கில் துடுப்பிட்டது
பண்பட்ட மனது.
<<>>

2 மறுமொழிகள்

  1. D.M.I.RAJ சொன்னது,

    அக்டோபர் 19, 2010 இல் 1:26 மு.பகல்

    super kavithai

  2. aravind சொன்னது,

    நவம்பர் 16, 2010 இல் 1:57 பிற்பகல்

    வரிவரியாய் படித்தது
    வாழ்த்துகளைப் பொழிந்தது
    ரசிக்கும் மனது


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.