வலைகளில் விழுவதற்கு மட்டுமல்ல
வலைவீசவும் தெரியும் மீன்களுக்கு!…
பெண்களின் கண்கள்.
ஃஃஃ
அக்டோபர் 17, 2008 இல் 9:09 பிற்பகல் (ஹைகூ)
Tags: கண்கள், கலை அரசன், வலை, ஹைகூ, Eye, Haiku, Kalaiarasan, net
வலைகளில் விழுவதற்கு மட்டுமல்ல
வலைவீசவும் தெரியும் மீன்களுக்கு!…
பெண்களின் கண்கள்.
ஃஃஃ
ஜூலை 23, 2008 இல் 8:07 மு.பகல் (ஹைகூ)
Tags: ஹைகூ, Haiku, Kalaiarasan
சிலர் பரம்பரை என்றனர்
சிலர் அறிவுஜீவிகளின் அடையாளமென்றனர்
பளிச்சிடும் வழுக்கைத்தலை.
*
கர்வமாய் ஒட்டிக்கொண்டது சாயம்;
உன்கர்வம் எத்தனை நாளோ?…
கருவியது தலைமுடி.
*
நொடிக்கொருமுறை கோதலும் சீவலும்
வாசனைஎண்ணெய் தடவி பராமரிப்பும்;
முடி உதிரும்வரை.
*
அதிர்ச்சியாய் தான் இருக்கின்றது,
இளமைமுறுக்கிற்கு விழுந்த பேரிடியோ?…
எட்டிப்பார்க்கும் இளம் நரை.
*
யோசித்துப்பார்க்க நகைப்பாய் வந்தது…
மீண்டும் வளராமலிருந்தால் கொடுப்போமா?…
காணிக்கையாய் முடியை.
* * *
ஜூலை 22, 2008 இல் 8:28 மு.பகல் (ஹைகூ)
Tags: கலை அரசன், ஹைகூ, Haiku, Kalaiarasan
கோடி நட்சத்திரம் கண்களில் மலர்ந்தது
காட்சியை இரசிக்கத்தான் மனமில்லை
சுவரில் மோதியவலி பின்தலையில்.
*
கண்களில் தெரிந்தது நீரின் காட்சி
தாகம் தணிக்குமா கானல் நீர்?
ஏழையின் கனவு.
*
வாழ்வின் சந்தோசமான தருணங்கள்;
ஏழை நினைப்பதும் நடக்கின்றது
கலைத்துவிடாதீர் தூக்கத்தை!.
*
அருகில் தெரிந்தது தொடுவானம்!…
தொட்டுவிட தொடர்ந்தே நடந்தேன்…
தொடர்கதையானது ஏழ்மையைப்போல.
*
வானம் பொய்த்துவிட்டது…
யாருக்கு இங்கே புரியும்?…
உதிரும் இலையின் வலி.
* * *
ஜூலை 21, 2008 இல் 8:22 மு.பகல் (ஹைகூ)
Tags: Add new tag, கலை அரசன், ஹைகூ, Haiku, Kalaiarasan
அப்பாவின் வியர்வை வாசம் ஞாபகத்தில்;
எங்கோ மழை பெய்திருக்க வேண்டும்
நாசியை வருடும் மண்மணம்.
ஃ
குளக்கரையோரம் எழும்சத்தம் காதைக் கிழிக்கும்;
சத்தமிட்டு சந்தோசிக்கும் தவளைகள்
வானில் கருமேகங்களின் சஞ்சாரம்.
ஃ
தெருவில் உல்லாசமாய் மழைத்துளியேந்தும் சிறுவன்;
மாடிவிட்டினுள் கான்கிரீட் கூரையை வெரிக்கின்றேன்
ஞாபகச்சிறையில் ஒழுகும் கீற்றுக்கூரை.
ஃ
பார்வையாளனுக்கும் மரியாதை கிடைக்கின்றது;
ஜன்னலோரம் தூவிச்செல்லும் பன்னீர்த்திவலைகளை,
வீதியிலிரங்கி நர்த்தனமாடும் மழை.
ஃ
கோடைக்கால குளியல் எல்லோருக்கும் பிடிக்கும்
ஈரம் துவட்ட மனமில்லையோ?!…
வழியும் நீர்த்திவலையோடு செடிகள்.
ஃஃஃ
பெப்ரவரி 13, 2008 இல் 8:54 மு.பகல் (இயற்கை, ஹைகூ)
Tags: கலை அரசன், கவிதை, காளான், ஹைகூ, Haiku, Kalaiarasan, Kavithai, Mushroom
வீடு கட்ட மரம் வெட்டினார்
வேறுமரம் தேடி பறந்தது பறவை
கூடு கட்டி குடியிருக்க.
ஃ
அனாதையாக தெருவில், உதிர்ந்த முடிகள்;
தத்தெடுத்துக் கொண்டன பறவைகள்
மெத்தையாய் கூடுகளில்.
ஃ
எதிர்பார்ப்பில்லாத தாய்மை உணர்வு
அலகோடு அலகுவைத்து உணவூட்டியது பறவை
கூடுவிட்டு என்று பறக்குமோ குஞ்சு.
ஃ
சேமிப்பை கற்றறியவில்லை இன்னும்
மழைநேரம் இரைதேடி தவிப்போடு
பறக்கும் குருவி.
ஃ
இது சாத்தியமில்லாதது!….
எந்தக்கல்லூரியில் பொறியியல் பயின்றது?…
தொங்கும் தூக்கணாங்குருவி கூடு.
ஃஃஃ
ஜனவரி 13, 2008 இல் 10:08 மு.பகல் (ஹைகூ)
Tags: கலை அரசன், கவிதை, மழை, ஹைகூ, Haiku, Kalaiarasan, Kavithai, Rain
சின்னச் சின்னக் குளங்கள்
சந்தோசமாய்க் குளிக்கும் சிட்டுக்குருவிகள்
சாலைக்குழிகளில் தேங்கும் மழைநீர்.
ஃ
தூக்கம்கலைந்த சோகமான இரவுகள்
இனிமையாய் தரையில் ஜலதரங்கம் வாசித்தது,
பொத்தலில் வழிந்த மழைநீர்.
ஃ
இயற்கையின் இன்னிசைக் கச்சேரி
இசையமைக்கக் கற்றுத்தந்தது யார்?…
குளத்தில் பட்டுத்தெரிக்கும் மழைநீர்.
ஃ
வானம்பார்த்து ஏரோட்டும் கோடைகாலம்
நம்பிக்கையின் ஆசிர்வாதமாய் அமிர்தமாய் ருசித்தது
உதட்டில் விழுந்த ஒருதுளி மழைநீர்.
ஃ
வழிமேல் விழிவைத்து காத்திருந்தது;
சிந்தும் துளிகளில் எந்தத்துளி முத்தாகுமோ?…
மழைநீரை எதிர்நோக்கும் சிப்பி.
ஃஃஃ
ஜனவரி 11, 2008 இல் 9:22 பிற்பகல் (ஹைகூ)
Tags: கலை அரசன், கவிதை, ஹைகூ, Haiku, Kalaiarasan, Kavithai
சாலையில் மிதந்துசென்றது சுமையுந்து (லாரி)
ஓட்டுநரும் மிதந்துகொண்டுதான் இருந்தார்;
மிதக்கவைக்கும் உற்சாகப்பானம்.
ஃ
உயிர்பயம் ஒட்டிக்கொண்டது
பின்னால் வந்துகொண்டிருந்தது சுமையுந்து (லாரி);
நவீன எமன் வாகனம்.
ஃ
மஞ்சள் விளக்கு மிளிர்ந்தது
இதயம் படபடப்பாய் பந்தயமிட்டது இன்ஜினோடு,
எந்தவாகனம் முந்திச்செல்லுமோ?.
ஃ
குழந்தை சுகப்பிரசவமானது ஆட்டோவில்
மருத்துவர் அறிந்தால் வருத்தப்படுவார்;
ஆட்டோவிலிருந்தது “பிரசவத்திற்கு இலவசம்”.
ஃ
ஊர்ப்பயணத்திற்கு மட்டுமல்ல வாகனம்,
மறுஉலகிற்கும் மெல்ல அழைத்துச் செல்லும்
உமிழும் புகை.
ஃஃஃ
ஜனவரி 10, 2008 இல் 7:18 மு.பகல் (உணர்வுகள், ஹைகூ)
Tags: கலை அரசன், கவிதை, ஹைகூ, Haiku, Kalaiarasan, Kavithai
உன்னை நேசித்தது மனது
இருவர் வயதும் பொருந்தாத போதும்;
நட்பு.
ஃ
சந்தித்து நாட்களாகிவிட்டது
வேறு வேறு திசைகளும் சென்றாகிவிட்டது
குறையாமலேயே இருக்கின்றது நட்பு.
ஃ
குளம் வற்றிப் போனது,
வண்டலோடு ஒட்டிக்காய்ந்தது கருவாடுகள்;
மீனுக்கும் நீருக்குமான நட்பு.
ஃ
நாணல் கரையைக் காத்தது
ஓடைநீர் நாணலை தழுவிச்சென்றது;
பரஸ்பர நட்பு.
ஃ
எங்கும் வியாபித்திருந்தனர் என் உறவுகள்
உடன் பிறந்தோர் அதிகமில்லாத போதும்
நட்பின் வட்டம்.
ஃஃஃ
ஜனவரி 9, 2008 இல் 8:10 மு.பகல் (ஹைகூ)
Tags: கலை அரசன், கவிதை, ஹைகூ, Haiku, Kalaiarasan, Kavithai
மேகமற்று துடைத்துவைத்த வானம்
வரண்டபூமியை குளிப்பாட்டிச் சென்றது மழை
எங்கோ தோன்றிய புயல்.
ஃ
பொட்டிழந்த நெற்றியாய் பூமி
மரங்களையும் பயிர்களையும் அழித்துச்சென்றது
புயல் காற்று.
ஃ
வியர்வைப்பூத்து நிற்கும் இலைகள்
தென்றல் தழுவவில்லையோ இரவில்?
இலையில் பனித்துளிகள்.
ஃ
அசையும் மரத்தைச்சுற்றிப் பறந்தது குருவி
நுணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கும் கூடு
கலைக்காதிருக்க வேண்டும் காற்று.
ஃ
எல்லாம் அதன் செயல்
எந்த இடத்தில் உட்காரவைக்குமோ?…
சருகைப் புறட்டும் காற்று.
ஃஃஃ
ஜனவரி 6, 2008 இல் 9:17 பிற்பகல் (ஹைகூ)
Tags: கலை அரசன், கவிதை, ஹைகூ, Haiku, Kalaiarasan, Kavithai
உறவினர்கள் யாராவது வருவார்களாம்,
மரத்திலிருந்து கரைந்து கொண்டிருந்தது
பசிமயக்கத்தில் காகம்.
ஃ
நீயும் நானும் உணரவேண்டும்,
ஒற்றுமையாய் இனத்தோடு பகிர்ந்துண்ணும்
காகம்.
ஃ
உணவு வைத்து காத்திருப்பர்
முன்னோர்கள் வருவார்களா என்று
காக்கை வடிவில்.
ஃ
கைமாறு அற்றக் கடப்பாடு,
குயில் முட்டைக்கு அடைகாக்கும்
காகம்.
ஃ
நேசர்படை சூழ்ந்து நிற்கும்
கூடுவிட்டகன்று பறக்கப் பழகும்
காக்கைக் குஞ்சு.
ஃஃஃ