ஹைகூ-ஜந்து

தீயின்றி தகிக்கின்றது
திச்சுடராய் – அவன்
பார்வை.

கட்டவிழ்ந்து வருவானா?
எல்லைகளற்று உலவ…
பட்டம்.

வந்தும் அழச் செய்வாள்
வராதிருந்தும் அழச் செய்வாள்
மழை.

நம்பியவர் துதிக்கின்றார்
நம்பாதவர் வெறுக்கின்றார்
கடவுள்.

முறைத்து முறைத்து
பார்க்கின்றான் – சுவரில்
பல்லி.

யாரால்!…

கடலின் காவு
சுனாமியாய்!…

புயலின் காவு
காத்திரீனாவாய்!…

மழையின் காவு
மாலாவாய்!…

எல்லாம் காரணம் இயற்கை.

நிவாரணம் பெறச் சென்ற
நாற்பத்து இருவரின்
காவு யாரால்?!…

மழையின் இசை…

வானில் கரு முகில் இடித்து
மின்னல் விட்டு விட்டு கண்சிமிட்ட
பண்ணோடு மழை பாரில் பொழிய
விண்ணென்று தமிழிசை பாடிற்று.