ஹைகூ – இலட்சுமணக் கோடுகள்!…


தினம் உதைத்தாலும்
வருந்தாமல் சுமப்பான்
பைக்.குடித்தால் கேடு என்றார்
குடித்தால் தான் ஓடுகின்றான்
எந்திரவூர்தி.


இலட்சுமணக் கோடுகள் அல்லவே
தாண்டாமல் இருப்பதற்கு?! – சாலை
நிறுத்தக்கோடுகள்.மோதவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றது
சிதைந்த உடல்களையும் வாகனங்களையும்
லெவல்கிராசிங்.

ஃஃஃ
By மா.கலை அரசன்.

கண்களின் ஏக்கம்!….


பூவுக்கும் சோகமுண்டு பூவை
அதை சூடுவதாலே!
பூமியும் சுடுவதுண்டு பூவையுடல்
வெம்மை பரவுவதாலே!
கடல்நீரும் கரிப்பதுண்டு கன்னியின்
கண்ணீரும் சேர்வதாலே!
கண்களில் ஏக்கமுண்டு வில்லொடிக்க
வருவானா ராமனென்றே?!.

ஃஃஃ

இவன்: மா.கலை அரசன்.

கனிந்த காதல்…


பொன்னன் சென்றான் ஆற்றங்கரை நிராட,
அன்னான் அவ் வூருக்கு புதியோன்
அறிமுகம் இல்லான்; ஆசையின் காரணம்
ஆற்றங் கரை வந்து விட்டான்;
அன்னவனும் படித்துரையைத் தான் நோக்க
வியபில் வாய் பிளந்தே நின்றான்
வஞ்சி கனியமுதை கண்ணால் கண்டே!…
முதல்பார்வை உள்ளத்தில் முத்தாய் பதித்திட்டான்
கனியமுதும் காளை அழகு கண்டே
உள்ளத்துள் ஆசை எழக் கண்டாள்
நாட்கள் வாரம் தாண்ட, எண்ணம்
உரைக்க ஏங்கிற்று இரு நெஞ்சமுமே…
காளையவன் தயங்கி நிற்க; கன்னி
கையிரண்டில் நீர்மண்டு வாடி நின்ற
முல்லைக்கே நீர் வார்த்தாள்;
வளர்ந்தது முல்லை; கனிந்தது காதல்.

ஃஃஃ

இவன்: மா.கலை அரசன்.

தமிழ்த்தாய் வாழ்த்து.


தமிழ்த்தாயே! தரணி யெல்லாம்
புகழ் பரப்பும் பெருந்தாயே!!
தற்கரீதியில் யானுனை அறியேன்
என்றாலும் உள்ள எண்ணமதை
தாய் உந்தன் பாதத்தில்
சாற்ற நெஞ்சமதில் நினைக்கின்றேன்
தனையன் பிழை பொருப்பாய்!
தன்னலமின்றி நீ செழிப்பாய்!!
ஃஃஃஃ

இவன்: மா.கலை அரசன்.