தாய்மொழி பேசு…

குயில்கள் இரண்டு சந்திக்கையில் குக்கூவென்று கூவக்கேட்டேன்
காகம் இரண்டு சந்திக்கையில் காக்காவென்று கரையக்கேட்டேன்
எந்நாளும் அவை இந்நிலை மாறாதிருக்கக் கண்டேன்
எத்தேசம் சென்றிடினும் எந்நாளும் இதையே கண்டேன்.

நீமட்டும் உன்னியல்பு எங்கனம் மறந்தாய் தமிழா?!…
தாய் மொழியை துச்சமென்றா துறந்தாய் தமிழா?!…
சென்னையிலே இருதமிழன் சந்தித்தால் “ஹவ் ஆர் யூ”, என்றாய்
மும்பையிலே இருதமிழன் சந்தித்தால் “ஹைசே ஹை”, என்றாய்.

தாய் மொழி பேசுவது தவறென்றா நினைத்தாய்?…
உன் தாய்க்கே இழிநிலையை ஏன் கொடுத்தாய்?…
இரவல் சட்டை அணிவதை பெருமையென்றா நினைத்தாய்
கந்தலானாலும் சொந்தச்சட்டை பெருமை யென்பதெப்படி மறந்தாய்.

உப்பிட்டாரை மறப்பதுவே தவறென்று எண்ணும் போது
உயிராய் உணர்வுதந்த தாய்மொழி மறப்பது சூது
உணர்வின்றி உயிர் இருப்பதில் என்ன மேன்மை
உணராது தாய்மொழி மறந்திட்டால், தமிழாநீ பொய்மை.

ஃஃஃ
இவன்: மா. கலை அரசன்.

3 பின்னூட்டங்கள்

 1. செப்ரெம்பர் 27, 2006 இல் 10:58 பிப

  ஆங்கிலத்தின் மோகத்தில் தவிக்கும் மக்களின் யதார்த்த நிலையை சாதாரன வார்த்தைகளில் உணர்த்தியிருக்கிரீர்…

  வாழ்த்துக்கள்!!

 2. cheena said,

  செப்ரெம்பர் 23, 2007 இல் 11:42 முப

  தாய்மொழி பேசுவதில், தமிழனைத் தவிர மற்ற அனைவரும் அவரது தாய் மொழியில் தான் பேசுகின்றனர் ‍- மற்றொரு உடன்பிறப்பினைக் காணும்போது

  இதையேக் கண்டேன் : இதையே கண்டேன்

  தவரென்றா : தவறென்றா

 3. Thanga Raj Prabu said,

  ஒக்ரோபர் 17, 2008 இல் 12:24 முப

  Hi brother,

  Sorry for typing in english.

  After seeing ur peom i remembering Bharathiyar.

  while british ruling india Gandhiji addressed in chennai, next day Bhrathiyar wrote one letter to Ghandhiji, Thank u for ur speech in chennai but while speaking time why u spoke in their language, instead of english u can use ur mother tongue (our national language) Hindi or Tamil Nadu Mother Tongue Tamil.

  Ghandiji read that letter next day he wrote one letter to Bharathiyar,

  Forgive me for addressed in Hindi, but why u wrote letter in english,why didn’t wrote in Tamil.

  Bharathiyar received that letter nextday Bharathiyar wrote another letter to Ghandiji,

  When ever i am writing letter, if that letter behalf of their mistake ( going to hurt their heart) that time i never use my mother tongue TAMIL.


Thanga Raj Prabu க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: