அ, ஆ…கவிதை…5 (அம்மா)

அன்பு அவள் மொழி
ஆறுதல் அவள் வார்த்தை
இன்முகம் அவள் முகவரி
ஈடில்லாதது அவள் பாசம்
உயர்வானது அவள் பண்புநலன்
ஊக்கமளிப்பாள் உயர்வு பெற
எதிரிக்கும் காட்டுவாள் கருணைமுகம்
ஏமாற்றம் நிகழும்போதும் இன்முகம்
ஐயங்களின் எல்கைக்கப்பால் அவள்ஆன்மா
ஒற்றுமையே அவள் வேதம்
ஓடம்போல்தான் கரைசேர்ப்பாள் நம்மை
ஔரவமானது அவள் சக்தி
அஃதே அவளே அம்மா.

ஃஃஃ

அ..ஆ..கவிதை..4(தமிழ்ப்பெண்.)

அழகான தேவதை அவள்
ஆண்டவனின் தனிப் படைப்பவள்
இன்முகமோ அவள் முகவரி
ஈடில்லா அழகோ வெகுமதி
உலகே வியக்கும் மெல்லிடை
ஊமை விழிகளோ வில்
எவர்தான் விரும்பார் சொல்
ஏமாற்றம் தான் விரும்பியோற்கு
ஐரிஸ் நிறமோ கண்
ஒரு தலையாய் காதலித்தோர்
ஓடாமல் ஓடுகின்றார் காண்
ஔரவம் தான் அவள்சொல்
அஃதேகாண் அவள் தமிழ்ப்பெண்.

ஃஃஃ

ஹைகூ – சவரத்தூரிகை.

தினம் கன்னத்தில் முத்தமிட்டே
என்முகம் எச்சில் செய்கின்றாள்
சவரத்தூரிகை.

முட்களோடு சண்டையிட்டு – தினம்
சமன் செய்கின்றான் முகம்
பிளேடு.

ரோஜாச் செடி.

ரோஜாச்செடியே ரோஜாச் செடியே
……..நீ என்னப் பேசுகின்றாய்
நீ நித்தம் பூத்தே
……..சுவாசத்தில் வாசம் வீசுகின்றாய்
இரவில் வந்தே பனியும்
……..உன்னை முத்திச் சென்றதுவோ
அதிகாலைத் தென்றல் தினமும்
……..மெல்லத் தழுவிச் சென்றதுவோ

மலரைச் சுமக்கும் நீயே
……..ஏன் முள்ளைச் சுமந்தனையோ
மானம் காக்க முள்
……..கொண்டு உன்னைக் காத்தனையோ
மென்மையின் இலக்கணம் உந்தன்
……..பூவிதழ் நீஇதை அறிவாயோ
பெண்மையின் மென்மை உந்தன்
……..இதழால் அறிவோம் தெரிவாயா?…

ஃஃஃ

இவன்: மா. கலை அரசன்.