ஹைகூ – தேர்தல்.

வாக்குகளை வாடகை பேசும்
ஜனநாயகத் திருவிழாச் சந்தை
தேர்தல்.

ஃஃஃ

என் கண்ணீரிலா
மக்களின் சந்தோசம்?!…
மழை.

ஃஃஃ

செலவுக்கணக்கில் நான்காயிரம் ரூபாய்
அவன் உயிர்பிரிந்தால் எனக்கென்ன?!…
ஓட்டுனர்.

ஃஃஃ

விந்தை மனிதர்கள்.


விந்தை மனிதர்களின்
வினோத உலகம் இது.?!…

கழனியில் கால்பதித்து
களை கழைந்து
பயிர் வளர்க்கும்
உழவனை
நல்ல விவசாயி என்கின்றார்.

மேச்சல் நிலம் பார்த்து
கால் நடை மேய்த்து
தாக்கவரும் நரிதனை விரட்டி
மந்தை கொண்டு சேர்ப்பவனை
நல்ல மேய்ப்பெனென்கின்றார்.

தாய்நாடு காக்க
ஆயுதம் ஏந்தி
எல்லையில்
எதிரிகளை சல்லடையாக்கும் சிப்பாயை
நல்ல வீரனென்கின்றார்
நாடு காக்கும் மரவரென்கின்றார்.

களையாய் நம்மில்
வியாபித்த வீணர்களை;
கொலைபாதக கொடியோனை;
பெண்களின்
கற்பை சூரையாடிய காமாந்தகனை;
நரியென சூழ்ச்சி செய்து
நயவஞ்சகமாய் பொருள் பரிக்கும் கள்வோனை;
காவலன் நான் தண்டித்தால்
என்ன காட்டுமிராண்டித்தனம்? என்கின்றார்.

அடடா…
விந்தை மனிதர்தளின்
வினோத உலகம் இது !…
ஃஃஃ