ஹைகூ – காலம்-மது-நீ.

ஓடிக்கொண்டேதான் இருக்கின்றது
நடப்பவற்றை எல்லாம் சகித்துக்கொண்டே!…
காலம்.

ஃஃஃ

மூழ்கிக்கொண்டிருந்தது குடும்பம்
மிதந்துகொண்டிருந்தான் அவன்
தண்ணீராய் மது.

ஃஃஃ

வெளியில் நனைகின்றேன் வியர்வையில்
உள்ளுக்குள் உரைகின்றேன் பனியாய்
எதிரில் நீ.

ஃஃஃ