ஹைகூ – காற்று – புறா – ஈ.

தீட்டுப்படக் கூடாதாம் சாமிபடையலில்
எல்லாவற்றையும் சுவைத்துப் பார்க்கின்றது
ஈ.

ஃஃஃ

பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டப் பகுதி
சுதந்திரமாக பறந்து செல்கின்றது
புறா.

ஃஃஃ

யார் கொடுப்பது தண்டனை
எல்லைக் கோட்டைக் கடக்கின்றதே!…
காற்று.

ஃஃஃஃஃ