களவு போவது சுகமானது !…

வியப்புகளுக்கு இங்கே
எல்லையில்லை…
களவு போவது சுகமானதென்பது
விந்தையல்லவா?!…
இருந்தும், விரும்பியே நாம்
நம்மை களவு கொடுக்கத்தான் செய்கின்றோம்.

அதிகாலை நேரப் பனித்துளி
புல்லின் மணிமகுடமாய் நின்று
பூரித்துச் சிரிக்கையில்
மனதை களவு கொடுத்த
மயக்க நிலையில் தான்
பூரித்துச் சிரிக்கின்றோம்.
புத்துணர்வைப் பெறுகின்றோம்.

காதலன் காதலியிடத்தும்
காதலி காதலனிடத்தும்
இதயத்தை முழுவதுமாய்
களவு கொடுத்ததாலேயே காதலில் உருகி
அன்னை தந்தை கூட மறக்கின்றோம்.

அர்த்தமற்ற அனர்த்தங்கள் ஆனபோதும்
தொண்டர்கள் கட்சித்தலைவர்களிடம்
தங்களின் மனங்களை முற்றும்
களவு கொடுத்ததாலேயே
முழுமையற்றவர்களின் ஆட்சியில்
ஆண்டாண்டு காலமாய் மூழ்கித்தவிக்கின்றோம்.

சின்னச்சிறு குழந்தையின்
கள்ளங் கபடமற்றச் செல்லச்சிரிப்பில்
நம்மை நாமே, தெரிந்தே
களவு கொடுத்ததால் தான்
சிரிது நேரமாவது
சுத்தர்களாக மாறிச் சிரிக்கின்றோம்.

இனிய இசைக்கு
செவிகளை களவு கொடுத்தே
மனதின் ரணங்களை மறக்கின்றோம்.

பூக்களின் மலர்தலில் – மனதை
களவு கொடுத்தே
புத்துணர்வைப் பலனாய் பெறுகின்றோம்.

அறிந்தே நம்மை நாமே
களவு கொடுப்பது
அழகான ஆச்சரியங்கள் மட்டுமல்ல
சுகமானதும் தான்.
ஃஃஃ

Cell Phone – கைபேசி(ஹைகூ)

கைபேசி

அழகாய்த்தான் சிரிக்கின்றது
ஆனால் தூக்கத்தைக் கெடுக்கின்றது
கைபேசி.

Parents – தாய் தந்தையர்(ஹைகூ)

அப்பா:மார்த்தாண்டம்அம்மா:புஸ்பம்மாள்


ஈடு இணையற்ற பிரம்மாக்கள்
ஊதியம் வாங்கா சேவகர்கள்
தாய் தந்தையர்.

எவருக்கும் கடன்பட ஆசையில்லை
எப்படி ஈடு செய்வேன்?!…
பெற்றவர்க்கு பட்டகடன்.

நாத்தீகம் வெறுக்கின்றேன்
தெய்வம் தினம் தொழுகின்றேன்
அன்னைதந்தை தெய்வமன்றோ?.

ஃஃஃ

Rain Drops – மழைத்துளி(ஹைகூ)

மழைத்துளி

முத்துக்கள் சிதறியதோ?!…
இலைமீது விளையாடும்
மழைத்துளிகள்.