சேராயோ உன்தாள்?!…

aranganathar.jpg


அரங்கனே அழகனே பாற்கடலில் பள்ளிகொண்டு
ஆனந்தமாய் அடியாற்கு நற்கதியை அருள்வோனே
இம்மையும் மறுமையும் இல்லாது ஏழுலகாளும்
ஈடில்லா ஈகையனே குசேலரின் ஒட்டினனே
உலகனைத்தும் வாமனனாய் மூவடியுள் அளந்தவனே
ஊழிகள் தோறும் ஊழிமுதல்வனாய் திகழ்பவனே
எஞ்ஞான்றும் எஞ்சலின்றி எளிஞர் எழுதற்கு
ஏமாப்பு செய்து காத்தருளும் எம்மானே
ஐக்கியநாதனே உன் அடிமுதல் முடிபார்த்து
ஒக்கயென் ஐம்புலனடக்கி உன்வாசல் கடக்கின்றேன்
ஓணப்பிரானே பாபம் ஒரிஇ
ஔலியா யென்னை சேராயோ உன்தாள்?!…

ஃஃஃ

அருஞ்சொற்பொருள்.

ஊழி – யுகம்
ஐக்கியநாதன் – திருமகளோடு கூடிய திருமால்
ஒட்டினர், ஒட்டினன் – நண்பன்
எஞ்ஞான்றும் – எப்போதும்.
எஞ்சலின்றி – குறைவின்றி
எளிஞர் – எனியவர், செல்வம் குறைந்தவர்.
ஏமாப்பு – அரணாதல், உதவுதல்
எம்மான்- தலைவன்
ஒக்க – ஒருசேர
ஒரிஇ – நீக்கி.
ஓணப்பிரானே – திருமால்
ஔலியா – பக்தன்.

ஃஃஃ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: