புதுப் பிறப்பெடுப்போம் புத்தாண்டில்…. (அ,ஆ…கவிதை-28).

அஞ்சதியாய் வந்தயுனை முழுதாய் உணர்வதற்குள்
ஆடிக்கழித்தேன் யானென்று புயலாய் செல்கின்றாய்
இன்புற்றிருந்து உன் தினங்கள் சுவைப்பதற்குள்
ஈசுரலீலை நடத்தி நடவாதுபோல் நகர்கின்றாய்
உழன்று சுழன்று உய்வது துணிந்தோம்
ஊசலாடல் வாழ்விலும் மனதிலும் மாறக்காணோம்
எதிரும் புதிருமான கால ஓட்டத்தில்
ஏகத்துக்கும் கனவுகளை வளர்த்தோம் – என்னே,
ஐதென ஐதுபடல் மனதினின்று துறந்தோம்
ஒரித்தல் செய்து இன்புற்று வாழ்வதென்பது
ஓர்குலத்துள்ளும் மறந்தோம் – வாதோழா
ஔவித்தலொழித்து புதுப்பிறப் பெடுப்போம் புத்தாண்டில்.

ஃஃஃ

அருஞ்சொற்பெருள்.

அஞ்சதி – காற்று
ஐதென – விரைவாக
ஐதுபடல் – இளகுதல்
ஒரித்தல் – ஒற்றுமையாய் இருத்தல்
ஔவித்தல் – பொறாமைப்படுதல்.

ஃஃஃ

6 பின்னூட்டங்கள்

 1. பாலா said,

  திசெம்பர் 31, 2007 இல் 5:37 பிப

  புத்தாண்டு கவிதைகள் அருமை
  புத்தாண்டு வாழ்த்துகள் சார் மீண்டும்
  சந்திப்போம். நன்றி

 2. ஜனவரி 3, 2008 இல் 6:36 பிப

  தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாலகுமார்.

 3. arunrayan said,

  ஜனவரி 5, 2008 இல் 12:18 முப

  கவிதைகளாக கலக்குகிறீர்கள். ஹைகூ கவிதைகள் அருமை.
  தொடர்ந்து கலக்குங்கள்.

  மகிழ்ச்சி!

 4. ஜனவரி 5, 2008 இல் 12:31 முப

  மிக்க நன்றி நண்பரே.

 5. bala said,

  ஜனவரி 8, 2008 இல் 2:56 பிப

  Hai,

  Nice. Wish u a happy new year friend.

 6. ஜனவரி 8, 2008 இல் 7:37 பிப

  நன்றி தோழி.
  தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: