கிராம வாழ்க்கை.(அ,ஆ…கவிதை-29).

அல்புலர்ந்து அரும்பு மலரும் அதிகாலை
ஆலிலைமீது தூங்கியப் பனித்துளி தூர்ந்திடும்
இசையோடு புள்ளினம் ஏகிடும் ஆகாயம்
ஈடற்ற ஓவியமாய் ஒளிர்ந்திடும் கீழ்வானம்
உழுபடை தோளேந்தி உழுநர்படை காடேகும்
ஊழைச்சதை கூட்டமொன்று ஊர்மன்றம் கூடும்
எட்டுத்திக்கு கதைகளையும் ஏகமாய் பேசும்
ஏதியமாய் சிறார்படை தெருவெங்கும் ஓடிவிளையாடும்
ஐரேயம் குடித்துமீழும் ஒரு கூட்டம்
ஒப்புமையில்லா கிராம வாழ்க்கை மனதில்
ஓசனித்தல் செய்யும் போது
ஔவியம் கொள்ளும் நரகநகர வாழ்கை.

ஃஃஃ

அருஞ்சொற்பொருள்.

அல் – இரவு
உழுபடை – கலப்பை
ஏதியம் – ஒளி
ஐரேயம் – கள்ளு.
ஓசனித்தல் – பறவை சிறகடித்தல்.
ஔவியம் –பொறாமை.

ஃஃஃ

2 பின்னூட்டங்கள்

 1. bala said,

  ஜனவரி 9, 2008 இல் 2:54 பிப

  Hai,

  Kalai this is very nice. Now we are in city. But really i think we loss our happiness of the Village life. Here we didn’t any Green valleys, Thoppu etc. Actually We cant breath healthy air here. We missed a lot.

  But i can remember my golden days of my childhood in my village(chinna manur near Theni). Thanks for that. All the best.

 2. ஜனவரி 10, 2008 இல் 12:45 பிப

  மிக்க நன்றி பாலா.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: