நடுத்தரவர்க்கத்தின் தவிப்பு.

பகலைத் சுமந்தே தூக்கத்தில் அமிழ்கின்றேன்
இரவைச் சுமந்தே துயிலினின்று விழிக்கின்றேன்.
இன்றைச் சுமந்தே நேற்றைக் கழித்தேன்
நாளையைச் சுமந்தே இன்று வாழ்கின்றேன்.

உணவைக் காண்கையில் பசியை துறக்கின்றேன்
பசியைச் சுமந்தே தினம்உணவை முடிக்கின்றேன்
வாழ்வில் உயர அயராது உழைக்கின்றேன்
வறுமையைச் சுமந்தே வாழ்வைக் கழிக்கின்றேன்

கனவுகளோடு உயரத்தில் பறந்து மகிழ்கின்றேன்
கண்விழித்து கல்முள்ளில் நடந்து தவிக்கின்றேன்
உள்ளுணர்வோடு சமரசம் செய்ய முயல்கின்றேன்
கள்ளில்விழுந்த தேன்வண்டாக தினம் தவிக்கின்றேன்.

****

4 பின்னூட்டங்கள்

  1. nithil said,

    ஜூலை 7, 2008 இல் 2:19 பிப

    பண வீக்கம் 11% தாண்டிய இந்த நேரத்தில் மிகவும் எதார்தமான கவிதை, வாழ்துக்கள்.

    நித்தில்

  2. ஜூலை 21, 2008 இல் 3:46 பிப

    மிக்க நன்றி நிதில்.

  3. ஒக்ரோபர் 13, 2008 இல் 5:54 முப

    அருமை! அருமை!!

  4. subha said,

    திசெம்பர் 4, 2012 இல் 12:45 பிப

    நான் படும் பாடு….


nithil -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி