அப்பாவின் வியர்வை வாசம்

அப்பாவின் வியர்வை வாசம் ஞாபகத்தில்;
எங்கோ மழை பெய்திருக்க வேண்டும்
நாசியை வருடும் மண்மணம்.

குளக்கரையோரம் எழும்சத்தம் காதைக் கிழிக்கும்;
சத்தமிட்டு சந்தோசிக்கும் தவளைகள்
வானில் கருமேகங்களின் சஞ்சாரம்.

தெருவில் உல்லாசமாய் மழைத்துளியேந்தும் சிறுவன்;
மாடிவிட்டினுள் கான்கிரீட் கூரையை வெரிக்கின்றேன்
ஞாபகச்சிறையில் ஒழுகும் கீற்றுக்கூரை.

பார்வையாளனுக்கும் மரியாதை கிடைக்கின்றது;
ஜன்னலோரம் தூவிச்செல்லும் பன்னீர்த்திவலைகளை,
வீதியிலிரங்கி நர்த்தனமாடும் மழை.

கோடைக்கால குளியல் எல்லோருக்கும் பிடிக்கும்
ஈரம் துவட்ட மனமில்லையோ?!…
வழியும் நீர்த்திவலையோடு செடிகள்.

ஃஃஃ

4 பின்னூட்டங்கள்

 1. Rex said,

  ஜூலை 21, 2008 இல் 11:23 முப

  Fabulous!

  Can they be categorised as haiku?

 2. ஜூலை 21, 2008 இல் 3:32 பிப

  மிக்க நன்றி நண்பரே.
  ஹைகூ தான். குறிப்பிட தவறிவிட்டேன்.

 3. aruna said,

  செப்ரெம்பர் 19, 2008 இல் 6:42 பிப

  மீண்டும் மழை…எப்படித் தவற விட்டேன்…இத்தனை நாளாய்??????
  அழகு…அதிலும் இந்த வரிகள்………//அப்பாவின் வியர்வை வாசம் ஞாபகத்தில்;
  எங்கோ மழை பெய்திருக்க வேண்டும்
  நாசியை வருடும் மண்மணம்///
  மனதை வருடியது…..
  அன்புடன் அருணா

 4. sivakumaran said,

  நவம்பர் 1, 2010 இல் 12:20 முப

  நன்றாக இருக்கின்றன, ஆனாலும் ஹைக்கூ நீளமாய் இருக்கின்றதே,
  இன்னும் சுருங்கச் சொன்னால் அழகாய் இருக்கும்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: