அப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.

அப்பா

அப்பா!
சிறுவயதில் உல்லாசமாய்
உன் தோள்மீது அமர்ந்து
ஊர் சுற்றிப் பார்த்ததும்

எங்களுக்கு காய்ச்சல் கண்டபோது
உடல் சூடு தணிய
உன் மார்பை
மெத்தையாக்கிய தருணங்களும்

வாலிப வயதில்
உலகவிசயங்களை தர்க்கம் செய்து
வாதிட்ட தினங்களும்

உன் வயோதிக காலத்திலும்
உற்றாருக்காகவும்
ஊருக்காகவும் ஏங்கித்தவித்த
உன்னோடு இனி
தர்க்கம் செய்யமுடியாத இடத்திற்கு
நீ சென்றிருந்தாலும்

நீ விட்டுச்சென்ற நினைவுகளும்
எழுதிவைத்து அச்சில் ஏற்றாமல்
விட்டுச் சென்ற கவிதைகளும்
உன்னை நினைவு படுத்தமட்டுமல்ல
உன் நினைவோடு
விவாதம் செய்யவும் செய்கின்றது.

இரண்டாண்டு மட்டுமல்ல
இரண்டாயிரமாண்டு ஆனாலும்
நினைக்கப்படுவாய்.
நீ மனிதன் மட்டுமல்ல கவிஞனுமல்லவா?…
உன் கவிதைகள்
உன்னை வாழவைக்கும் என்றும் உலகில்.

ஃஃஃ

8 பின்னூட்டங்கள்

 1. கானா பிரபா said,

  ஜூலை 26, 2008 இல் 6:56 பிப

  உங்கள் அப்பாவின் நினைவுகள் கனக்க வைக்கின்றன. பிரிவில் தான் தெரிகின்றது இன்னும் அவரின் அருமை.

 2. ஜூலை 26, 2008 இல் 10:57 பிப

  vaaZumbothu ellaa maganukum puripadaatha uravu athu.

 3. ஜூலை 27, 2008 இல் 10:27 முப

  இனி ஒவ்வொரு நாளும் என் அப்பாவைக் கொண்டாட வேண்டும் என்று நினைக்க வைத்துவிட்டது உங்களது கவிதை…

 4. naanal said,

  ஓகஸ்ட் 6, 2008 இல் 11:44 முப

  உண்மை தான் அப்பா என்கிற உறவுக்கு உண்மையில் ஈடு இணை இல்லை…

 5. செப்ரெம்பர் 23, 2008 இல் 5:20 பிப

  அப்பாவின் நினைவுகளுக்குள் அமிழ்த்திவிட்டீர்கள்.

 6. sathish kumar said,

  செப்ரெம்பர் 26, 2008 இல் 11:44 முப

  en appa irandhu oru varudam aagivittaddhu… ungal kavidhai padithu en kangal kalangi vittana…..ungal kavidhayai paditha vadhu petrorin arumai theriyatum… thandhayin anbai purindhu kolladhavargaluku… en endral naanum en thandhayai veruthu odhukinein avar arugil illa dha podhu ippodu azugirein… arumai therindhu

 7. ponmudi said,

  ஒக்ரோபர் 5, 2008 இல் 5:19 பிப

  Etha raathavathu thirunthatum yanooda kudikaara appaaa………

 8. bala said,

  நவம்பர் 9, 2008 இல் 6:13 பிப

  pettra appavai marakatha ungal vazhvu endrum innimai anadhu pasumaiana ninaivugal ellorukkum undu…… by R.chithra rajan(anni)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: