இலையின் பயணம் – இன்னொரு ஜனனம்.

இரவின் பனியை உண்டு
இன்புற்றிருந்தது இறுதி நாளின்
பயணத்தை எண்ணி;
உதிரப்போகும் சருகொன்று…
இன்பம் தானா உதிர்வதில்?!…

துளிர்த்ததுமுதல்
உதிரும் நாள் வரை உழைத்தாகிவிட்டது…
உயிர்கள் சுவாசிக்க ஆக்சிஸனை
கொடுத்தாகிவிட்டது…

உதிர்தலென்பது உயிர்விடலா?!…
இல்லையில்லை…
இலையின் வாழ்க்கை சுழற்சின்
இன்னொறு பக்கம்…

கிளையொடு ஒட்டிய உறவுகள் முடிந்து…
ஊட்டம் கொடுத்த
பூமியோடு உறவாட
இனிப் புதுப்பயணம்…
இன்னொறு ஜனனம்…

பயணத்தின் பாதை தீர்மானிக்க
இலைக்கு ஆசைதான்…
முடிக்கும் வல்லமை காற்றின் கைகளில்!…

உதிரும் வேளை..
இதமாய் வருடிச்செல்கின்றது தென்றல்…
பழகியநாட்களின் பரிவு
தென்றலின் குளிர்ச்சியில்…
இனியிருவரும் தொடுதல் சாத்தியமோ?!…

தாயின் கருவறைவிட்டகலும் சேயாய்
காம்பைவிட்டகலும் முதிர்ந்த இலை…
இது இன்னொரு ஜனனம்…
பாதை தீர்மானித்து
மெல்ல பறக்கின்றது
மரத்தின் பாதம்தொட்டு
புதுப்பயணம் தொடங்க…

விதியின் கைகள் வலியது…
இதுவரை வருடிச்சென்ற காற்றின் கைகள்
இப்போது வலியதாய்…
திசைமாற்றி தூக்கியெறியப்படும் இலை…
இலையின் திசையை காற்றே தீர்மானிக்க
இலையின் பயணம் இனி எங்கெங்கென்று
யார் அறிவார்?!…

ஃஃஃ

5 பின்னூட்டங்கள்

 1. ஒக்ரோபர் 14, 2008 இல் 1:40 முப

  வணக்கம் உங்களது கவிதைகள் மிக சிறப்பாக உள்ளது
  உங்களை பிரபலங்கள் நிகழ்விற்காக பேட்டி காண விரும்புகிறோம்.
  எனவே எம்முடன் தொடர்பு கொள்வீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி
  வ-மைந்தன்
  தொலைபேசி-00 44 79 43 42 22 69

  http://www.kalakam.com

  kalakam_@hotmail.com

 2. ஒக்ரோபர் 19, 2008 இல் 12:34 பிப

  // தாயின் கருவறைவிட்டகலும் சேயாய்
  காம்பைவிட்டகலும் முதிர்ந்த இலை…
  இது இன்னொரு ஜனனம்…
  பாதை தீர்மானித்து
  மெல்ல பறக்கின்றது
  மரத்தின் பாதம்தொட்டு
  புதுப்பயணம் தொடங்க…

  விதியின் கைகள் வலியது…
  இதுவரை வருடிச்சென்ற காற்றின் கைகள்
  இப்போது வலியதாய்…
  திசைமாற்றி தூக்கியெறியப்படும் இலை…
  இலையின் திசையை காற்றே தீர்மானிக்க
  இலையின் பயணம் இனி எங்கெங்கென்று
  யார் அறிவார்?!…//

  அருமையான கவிதை நண்பரே ..
  இந்த வரிகள் மனதை
  மிக அதிகம் சிந்திக்க வைக்கிறது ..
  யோசித்து பார்த்தேன்
  மனிதனின் முடிவு கூட இப்படி தானே ..
  மரணத்திற்கு பின் எங்கே செல்கிறோம்
  எத்தனை தூரம் என எதுவுமே தெரியாத புதிராய் …

  நல்ல ஒரு கவிதை படித்த திருப்தி மனதில் ….

  நன்றிகள் பல …

  அன்புடன்
  இனிய நண்பன்
  விஷ்ணு

 3. thirupoonthurathi said,

  ஒக்ரோபர் 31, 2008 இல் 2:04 பிப

  kavitha miga azagu yen nannparaga mudiuma

 4. meera said,

  ஜனவரி 13, 2009 இல் 3:20 முப

  வணக்கம் கலையரசன் இந்த கவிதை மிகவும் அழகனது.
  எல்லாவரிகளும் சிறப்பாக இருக்கிறது.என் மனதை தொட்ட
  வரிகளை சொல்ல விரும்புகிறேன்.

  //உதிர்தலென்பது உயிர்விடலா?!…
  இல்லையில்லை…
  இலையின் வாழ்க்கை சுழற்சின்
  இன்னொறு பக்கம்…//

  //இன்னொரு ஜனனம்…
  பாதை தீர்மானித்து
  மெல்ல பறக்கின்றது
  மரத்தின் பாதம்தொட்டு
  புதுப்பயணம் தொடங்க…//

  இத்தனை நாள் சுமந்ததிற்கு நன்றி சொல்வது போல் உள்ளது.

  இலையின் வாழ்கையில் எத்தனை அழகு,அதை நீங்கள் சொன்னவிதமும் றொம்ப அழகு.என் இனிய பாரட்டுக்கள்.

  அன்புடன்
  meera

 5. aravind said,

  நவம்பர் 16, 2010 இல் 1:54 பிப

  வாழும் வரை உழைத்தபோதும் வாடி உதிர்கையில் எங்கு போவோம் என்று அறியாதது இலை மட்டுமல்ல நண்பரே.. பல மாந்தரின் நிலை கூட..

  அருமையான கவிதைக்கு நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: