அழகின் அளவுகோல்

அழகின் அளவுகோல்

அகவை என்ன அழகின் அளவு கோலா?!
ஆண்டுகள் கடந்து அகவை அதிகமானால்
இழந்து போகும் அழகென்பதும்;
ஈடற்ற மனதுகூட தளர்ந்துபோகும்
உடலின் உணர்வுகள் வற்றிப்போகும்
ஊன் உணவும் குறைந்துபோகும்
எறும்பென நகர்ந்த கால்கள்
ஏகமாய் சோர்ந்து போகும்
ஐயமுற்று மனது அல்லலுறும் – எதனோடும்
ஒப்புநோக்கி ஏக்கமுறு மென்பதும்;
ஓங்கிய குணத்தார்க்கும் மனத்தாற்கும் பொறுந்தாது;
ஔரவமாவள் உன் அழகிலும் மனதிலும்
அஃதே கண்டேன் யான்.

3 பின்னூட்டங்கள்

  1. subha said,

    திசெம்பர் 4, 2012 இல் 12:39 பிப

    அ….. ஆ…… அருமை…

  2. Thandapani.S said,

    ஜனவரி 5, 2013 இல் 10:33 பிப

    Thanks

  3. Asir Anbazhagan said,

    ஜனவரி 7, 2013 இல் 7:06 பிப

    Kalai, nalla kavithai;

    அழகின் அழவுகோலா? அல்லது அளவு கோலா?


Asir Anbazhagan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி