அழகிய(அதிசய) இரட்டை கத்திரிக்காய்

கத்திரிக்காய்

திருச்சி சுந்தர் நகரில் உள்ள பத்மா பழமுதிர்ச்சோலைக்கு மனைவியுடன் காய்கரி வாங்கச் சென்றபோது கண்டெடுத்தது இந்த அதிசய இரட்டைக் கத்திரிக்காய்.

பிஸ்கட் வேணுமா?!…

படம் கொடைக்கானல் S.V.International லாட்ஜில் தங்கியிருந்த போது 14.07.06-ம் தேதி காலையில் நாங்கள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த குரங்கிற்கு பிஸ்கட் கொடுத்து அது சாப்பிடும் போது எடுத்தது.

 kodaikkanal-trip-009.jpg

குத்தூசியாய்
உள்ளிரங்கியது-கொடைக்கானல்
காலை குளிர்.

நேற்று உண்ட
இலையும் கனியும்
காலைக்கடனில் கழிந்து போனது.
            

பசி வந்தால் பத்தும் பறக்கும்
ஆறறிவு மனிதற்கே!…
எனும் போது என் நிலை எங்கே?
பசியில் கறைந்தது பயம்.
   

திறந்திருந்த
விடுதியின்
வாசல் வாவா என்றது.
பசியோ
உள்ளே போபோ என்றது.

தாவிக்குதித்து உட்புகுந்து
அறையில் அலச
அகப்பட உணவேதுமில்லை.
 

விரக்தியில் வெளியேற எத்தணித்தேன்.
எந்தன் விதியென வந்தான்
விடுதியின் விருந்தினன்-நானோ
பயத்தினில் உறைந்தேன் என்னுள்ளே.
         

அஞ்சம் மறைத்து-அவன்
அஞ்சிட வேண்டி
அரிசிப் பல் வரிசை காட்டி
சிலிர்த்து நின்றேன்.

பரிவாய் அவனோ
கையிடை கொண்ட பெட்டி திறந்து
தன்னுணவு எனக்கே பகிர்ந்தளித்தான்.
தன் முன்னவன் சொல்லுக்கு
உயிரளித்தான்.

          

மஞ்சள் மலர்!…

மஞ்சள் மலர்

புதிய

விடியலுக்கு

வரவேற்போ?!…