இளம் சூரியன்…

இளம்சூரியன் நீ உனைமறந்து வீணே சுழல்கின்றாய்
வளம்நிறைந்த நின்சிந்தனையை வீணே சிறகொடிக்கின்றாய்
களம்காண போலிப் பயம்கொண்டு சுணங்கித் திரிகின்றாய்
இளையபாரதத்தின் மணிமகுடம் நீயென்பதை ஏனே மறக்கின்றாய்

திரைகளுக்கு முன்னே மண்டியிட்டு பிறைநிலவாய் குறைகின்றாய்
கரைபட்ட மனிதனையும் தலைவனென்று போற்றி ஏற்றுகின்றாய்
மரைகழன்ற அறைகுரைக்கும் அரசியல் சாயம் பூசுகின்றாய்
அரசாள அர்ப்பனுக்கு வாக்களித்து அரியணை ஏற்றுகின்றாய்.

தினவெடுத்த தோள்கள் இருந்தும் கனவுகளோடு உழல்கின்றாய்
மனவழுக்கில் தோய்ந்து சிரம் தாழ்ந்து வாழ்கின்றாய்
இனமக்கள் நேசம்கூட பண மதிப்பில் பார்க்கின்றாய்
கனவுகள் காலத்தைவெல்ல உதவாதென்பதை ஏன் மறக்கின்றாய்?

இனி மறைந்து போகட்டுமுன் சிறுமைகள் அத்தனையும்
நனி சிறந்து தழைக்கட்டுமுன் பன்முக திறமைகள்
கனியென நல்லோர்க்கு பயனாகட்டுமுன் நல் வினைகள்
கனலென கனன்று துகளாக்கட்டும் தீயோரை உன்செயல்கள்.

ஃஃஃ

Advertisements

சிம்புவா?!….இப்படி….


சிலரைப்பற்றி நாம் கேள்விப்படுவது ஒன்றாக இருக்கும் ஆனால் அவர்களின் உண்மை உரு அதற்கு நேர்மாராக இருக்கும். இதற்கு எனக்கு நல்ல ஒர் உதாரணம் சமீபமாக கிடைத்தது.

உண்மையில் சிம்புவை, அதாங்க லிட்டில் சூப்பர் ஸ்டாரைப் (இந்த பட்டம் அவருக்கு பொருந்தும் என்பது என் தாழ்மையான எண்ணம்) பற்றி செய்தித்தாள்களில் படித்த போது எனக்கு அவரை ஒரு திமிர் பிடித்த பையனாகத்தான் எண்ணத்தோன்றியது.

ஆனால் சமீபகாலமாக விஜய் டீவியில் நடந்து வரும் ஜோடி நம்பர் – 1 சீசன் -2 நடனப்போட்டி நிகழ்ச்சிக்கு சிம்பு மூன்று நடுவரில் ஒருவராக இருந்து செயல்பட்டு வருகின்றார். அவரது பக்குவத்தையும் பொறுமையையும் பார்க்கும் போது இது நாம் பத்திரிகைகளில் படித்த சிம்புவா என எண்ணி ஆச்சரியப்பட்டு இருக்கின்றேன். காரணம் இந்தி Star Plus சேனலில் நடக்கும் இது போன்ற போட்டி நிகழ்ச்சிகளையும் பார்த்து இருக்கின்றேன். அதில் பங்கு பெறும் நடுவர்களில் காட்டு கத்தலையும் பக்குவமற்ற நிலையையும் பார்த்து வேதனைப்பட்டு இருக்கின்றேன்

எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் நேற்று (06.10.07) இரவு 8.00 – 09.00 மணிவரை நடந்த நிகழ்ச்சியில் சிம்பு நடந்து கொண்ட விதம், அவரின் பொறுமை, உண்மையான உள்ளம் அனைத்தும் வெளிப்பட்டு சிம்புவைப்பற்றிய எனது பழைய எண்ணங்களை தவிடு பொடியாக்கி விட்டது.

முடிந்தால் இன்று மதியம் 03.00 மணிக்கு மறு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள். உங்களுக்கே புரியும் நான் சொல்வதன் உண்மை.

வாழ்த்துக்கள் சிம்பு….

சிம்புவின் இந்த மனம் இப்போதைய அரசியல் வாதிகளுக்கு இருந்தால் கண்டிப்பாக 2020-ல் நாம் நன்கு வளர்ந்த வல்லரசு நாடுதான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் சிம்பு.